முகப்பு /செய்தி /விளையாட்டு / டி20 உலகக்கோப்பை ஸ்குவாடில் மிஸ்ஸிங் - அப்செட்டில் பும்ரா போட்ட ட்வீட்

டி20 உலகக்கோப்பை ஸ்குவாடில் மிஸ்ஸிங் - அப்செட்டில் பும்ரா போட்ட ட்வீட்

பும்ரா

பும்ரா

குறுகிய வடிவிலான போட்டிகளில் இந்திய பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்களின் வரிசையில் பும்ரா 3-வது இடத்தில் உள்ளார்.

  • Last Updated :
  • Chennai [Madras], India

உலகக்கோப்பை தொடரில் நான் விளையாடாதது எனக்கு மிகவும் ஏமாற்றமாக உள்ளது என இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா கூறியுள்ளார்.

பும்..பும்..பும்ரா டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் துருப்புச்சீட்டாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட நிலையில் அவரது விலகல் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்.. சிக்கனமாக பந்து வீசக்கூடியவர். துல்லியமாக யார்கர் அடிப்பதில் கில்லியான பும்ரா காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் பும்ரா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20போட்டியில் ஆடாமல் இருந்தார். அதன்பின்னர் இந்த தொடர் முழுவதும் பும்ரா விளையாடா மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் டி20 உலகக்கோப்பை பும்ரா விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்விக்கு மவுனம் காத்து வந்த பிசிசிஐ அதன்பின்னர் பும்ரா விலகலை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ரசிகர்களை போலவே பும்ராவுக்கும் இது மிகப்பெரிய ஏமாற்றமே. குறுகிய வடிவிலான போட்டிகளில் இந்திய பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்களின் வரிசையில் பும்ரா 3-வது இடத்தில் உள்ளார். பும்ராவுக்கு மாற்று வீரர் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ரிசர்வ் வீரர்களான ஷமி மற்றும் தீபக் சாஹர் அந்த இடத்தை நிரப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

top videos

    உலகக்கோப்பையில் விளையாடாதது குறித்து பும்ரா முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.  ”உலகக்கோப்பை தொடரில் நான் விளையாடாதது எனக்கு மிகவும் ஏமாற்றமாக உள்ளது. அதேவேளையில் எனது உடல்நிலையில் அக்கறை எடுத்து எனக்கு வாழ்த்து தெரிவித்த எனக்கு உறுதுணையாக இருக்கும் அன்பானவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் குணமடைந்ததும் ஆஸ்திரேலியாவுக்கு என்று அணியை உற்சாகப்படுத்துவேன்” எனக் கூறியுள்ளார்.

    First published:

    Tags: Cricket, Jasprit Bumrah, T20 World Cup