தோனியைப் பின்பற்றிய ஐ.நா பிரதிநிதி... ருசிகர தகவலால் வியப்பில் ரசிகர்கள்!

சையத் அக்பருதீன் - தோனி.

I am a believer in #Dhoni’s approach, says #SyedAkbaruddin | தோனி, இக்கட்டான சூழலிலும் களத்தில் எப்போது அமைதியாக இருந்து, கடைசி வரை முயற்சித்து வெற்றியைப் பெற்றுக்கொடுப்பார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கூல் கேப்டன் தல தோனியைப் பின்பற்றியதாக, ஐ.நா-வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியான சையத் அக்பருதீன் கூறியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

  காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாதிகள் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் (சி.ஆர்.பி.எப்) உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்- இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றது. பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு இந்தியாவில் பல திட்டமிட்ட தாக்குதலை நடத்தியுள்ளது.

  இதன் காரணமாக அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்தன.

  ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் | maulana-masood-azhar
  ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார்.


  இந்தியாவின் தீர்மானத்துக்கு அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்ட நிலையில், சீனா மட்டும் முட்டுக்கட்டைப் போட்டு வந்தது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலால் மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியான சையத் அக்பருதீனின், தொடர் முயற்சியால் நீண்ட இழுபறிக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  Syed Akbaruddin, சையத் அக்பருதீன்
  ஐ.நா-வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி சையத் அக்பருதீன்.


  இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அக்பருதீன் கூறுகையில், “நான் தோனியின் அணுகுமுறையில் நம்பிக்கை கொண்டவன். எந்தக் குறிக்கோளையும் நிறைவேற்ற முயற்சிக்கும்போது இருக்கும் நேரத்தைவிட அதிக நேரம் இருப்பதாக நினைத்துக்கொள்ள வேண்டும். நேரம் முடிந்துவிட்டது என கூறாதீர்கள், முன்கூட்டிய முயற்சியைக் கைவிட்டுவிடாதீர்கள்” என்று தெரிவித்தார்.

  தோனி, இக்கட்டான சூழலிலும் களத்தில் எப்போது அமைதியாக இருந்து, கடைசி வரை முயற்சித்து வெற்றியைப் பெற்றுக்கொடுப்பார். ஐ.நாவின் பிரதிநிதி ஒருவர், தோனியின் பாணியை ஒப்பிட்டுக் கூறியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

  மசூத் அசார் யார்? ஏன் அவர் சர்வதேச தீவிரவாதி...?

  வயதை மறைத்து விளையாடினாரா அப்ரிடி..? சுயசரிதை புத்தகத்தால் புதிய சிக்கல்!

  ஐ.பி.எல் தொடரில் இருந்து தோனி ஓய்வா? ரெய்னா சூசகப் பேச்சால் பரபரப்பு!

  சொன்னதை செய்து காட்டிய டேவிட் வார்னர்!

  உலகத்திலேயே தோனி தான் சிறந்த கேப்டன் - பிராவோ

  சூப்பர் ஓவர் பரபரப்பு! ஹைதராபாத்தை வீழ்த்தி ப்ளேஆஃப்க்குள் நுழைந்தது மும்பை அணி

  Also Watch...


  தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


  விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.  Published by:Murugesan L
  First published: