ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஜானி பேர்ஸ்டோ, வார்னர் அதிரடி! சென்னையை எளிதாக வீழ்த்திய ஹைதராபாத் அணி

ஜானி பேர்ஸ்டோ, வார்னர் அதிரடி! சென்னையை எளிதாக வீழ்த்திய ஹைதராபாத் அணி

இன்றைய போட்டியில் தோனி இல்லாத நிலையில், சுரேஷ் ரெய்னா கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். டாஸ் வென்ற ரெய்னா பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சென்னை அணிக்கு எதிரானப் போட்டியில் ஹைதராபாத் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது. இன்றைய போட்டியில் தோனி இல்லாத நிலையில், சுரேஷ் ரெய்னா கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். டாஸ் வென்ற ரெய்னா பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.

அதிரடியாக ஆடிய டேவிட் வார்னர் 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்ஸன் 3 ரன்களிலும், விஜய் சங்கர் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுபுறம் அதிரடியாக ஆடிய ஜானி பேர்ஸ்டோ ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் ஹைதராபாத் அணி 16.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Also see:

First published:

Tags: IPL 2019