கே.எல்.ராகுல் அதிரடி வீண்... பஞ்சாபை வீழ்த்தியது ஹைதராபாத்!

அடுத்ததாக பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில் களமிறங்கினர். கெய்ல் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். #SRHvKXIP

கே.எல்.ராகுல் அதிரடி வீண்... பஞ்சாபை வீழ்த்தியது ஹைதராபாத்!
ஹைதராபாத் அணி
  • News18
  • Last Updated: April 30, 2019, 11:59 AM IST
  • Share this:
பஞ்சாப் அணிக்கு எதிரானப் போட்டியில் ஹைதராபாத் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் தொடரின் 48-வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது.

அடுத்ததாக பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில் களமிறங்கினர். கெய்ல் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மாயன்க் அகர்வால் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிகோலஸ் பூரன் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.


மறுபுறம் அதிரடியாக ஆடிய லோகேஷ் ராகுல் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்மூலம், ஹைதராப் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
First published: April 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading