SRHvKKR | கொல்கத்தா அணியை துவம்சம் செய்த வார்னர்-பேர்ஸ்டோ ஜோடி!

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர், பாரிஸ்டோ ஜோடி அதிரடி ஆட்டத்தில் ஈடுப்பட்டனர்.இருவரும் போட்டி போட்டு கொண்டு கொல்கத்தா அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டனர்.

news18
Updated: April 21, 2019, 7:22 PM IST
SRHvKKR | கொல்கத்தா அணியை துவம்சம் செய்த வார்னர்-பேர்ஸ்டோ ஜோடி!
SRHvKKR
news18
Updated: April 21, 2019, 7:22 PM IST
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் சீசனின் 38 வது லீக் போட்டியில் ஹைதராபாத் - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

இதை தெடார்ந்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக லியோன், சுனில் நரைன் களமிறங்கினார். அதிரடியாக விளையாடிய நரைன் 8 பந்துகளில் 25 ரன் எடுத்து அவுட்டானார். அதனை தொடர்ந்து களமிறங்கிய கில், ரானா, கேப்டன் திணேஷ் கார்த்திக் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர்.



அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து கொல்கத்தா தடுமாறினாலும் லியோன் பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்து அவுட்டானார். கொல்கத்தா அணியின் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ரஷல் 2 சிக்சர்கள் மட்டும் விளாசி 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக கலில் அஹமது 3 விக்கெட்களை வீழ்த்தினார்.



இதை தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர், பேர்ஸ்டோ ஜோடி அதிரடி ஆட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இருவரும் போட்டி போட்டு கொண்டு கொல்கத்தா அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில் கேப்டன் வார்னர் 38 பந்துகளில் 5 சிக்சர், 4 பவுண்டரி விளாசி 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து அதிரடியாக பேர்ஸ்டோ அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். முடிவில் ஹைதராபாத் அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேர்ஸ்டோ 80 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்கமால் இருந்தார்.






Also see:

First published: April 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...