ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி20 அணியின் ’மிஸ்டர் 360’ சூர்யகுமார் யாதவ்! | வீடியோ

டி20 அணியின் ’மிஸ்டர் 360’ சூர்யகுமார் யாதவ்! | வீடியோ

இந்திய டி20 அணியின் தவிர்க்க 
முடியாத சக்தியாக மாறும் சூர்யகுமார் யாதவ்

இந்திய டி20 அணியின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறும் சூர்யகுமார் யாதவ்

தற்போதைய இந்திய டி20 அணி சூர்யகுமார் யாதவ் இல்லாமலும் பலமாகவே உள்ளது. ஆனால் அவர் மிடில் ஆர்டர்ல ஆடும்போது அணியின் பலம் வெல்ல முடியாத அசுர பலமாக மாறுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras] | Assam

  இந்திய டி20 கிரிக்கெட்டின் தவிர்க்கமுடியாத சக்தியாக மாறிவருகிறார் ‘மிஸ்டர் 360’ சூர்ய குமார் யாதவ்.

  சூர்யகுமார் யாதவ்வின் இந்த பார்ம் தொடர்ந்தால் இது போல் அவர் இந்திய அணிக்கு அவர் வெற்றி ஈட்டித்தந்தால், எப்படி டெஸ்ட் கிரிக்கெட் என்றால் சிறந்த வீரர் கவாஸ்கர், ஒரு நாள் போட்டிக்கு சச்சின் டெண்டுக்ல்கர் என கூறப்படுகிறதோ அப்படி டி20 போட்டிகளுக்கு சூர்யகுமார் யாதவ் என்று கூறும் அளவுக்கு அவர் உயர்வார் என்றே கணிக்கப்படுகிறது.

  இதற்கு முன் தோனி, யுவ்ராஜ் சிங், விராட் கோலி, ரோகித் சர்மா என்று டி20 ‘மேட்ச் வின்னர்ஸ்’ இந்திய அணியில் இருந்தாலும் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது கவனம் பெறுகிறது.

  மைதானத்தின் அத்தனை பக்கங்களுக்கும் அவர் பந்தை அடிப்பதனால் பந்து வீச்சாளர்கள் அவருக்கு எந்த மாதிரி பந்தை போடுவது என்று தெரியாமல் திணறுகின்றனர். இது நமக்கு மிஸ்டர் 360 என்று அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்க லெஜண்ட் டிவிலியர்ஸையே ஞாபகப்படுத்துகிறது.

  டிவிலியர்ஸுக்கும் சூர்யகுமார் யாதவுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் டிவிலியர்ஸின் ஷாட்கள் சக்திவாய்ந்தவையாக இருக்கும். ஆனால் சூர்யகுமார் யாதவ் எந்த மெனக்கெடலும் இல்லாமல் தன்னுடைய மணிக்கட்டின் லாவகமான திருப்புதல் மூலமே சுலபமா ஷாட்களை அடிக்கிறார்.

  ஆனால் இருவருக்கும் உள்ள ஒற்றுமை பந்தை மிகக் குறைந்த நொடிகளில் கணித்து அதை ரன்களாக மாற்றுவது. அதுக்கு சூர்யகுமார் தென் ஆப்பிரிக்க அணியுடன் ஆடிய ஆட்டமே ஒரு சான்று.

  தற்போதைய இந்திய டி20 அணி சூர்யகுமார் யாதவ் இல்லாமலும் பலமாகவே உள்ளது. ஆனால் அவர் மிடில் ஆர்டர்ல ஆடும்போது அணியின் பலம் வெல்ல முடியாத அசுர பலமாக மாறுகிறது.

  Published by:Saravana Siddharth
  First published:

  Tags: Cricket, T20, T20 World Cup