ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்திய அணி வெற்றிபெற வாழ்த்து தெரிவிக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் - காரணம் இதுதான்!

இந்திய அணி வெற்றிபெற வாழ்த்து தெரிவிக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் - காரணம் இதுதான்!

மாதிரி படம்

மாதிரி படம்

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேனா போட்டி மிக முக்கிய வாய்ந்த போட்டியாக பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய அணிக்கு ஆதரவாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்தியா -தென் ஆப்பிரிக்கா போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என சமூகவலைதளங்களில் பாகிஸ்தான் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

  8வது டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நாளை இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணி மோதவுள்ளன. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் கிட்டத்தட்ட அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதியாகி விடும். இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கடந்த இரண்டு போட்டிகளில் அசத்தி வருவதால் ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் பேட்டிங்கில் விராட் கோலி, சூர்யாகுமார் யாதவ் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த போட்டியில் தொடக்க வீரர்களாக ராகுல் இறங்குவார அல்லது ரிஷப் பந்த் இறங்குவார என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

  இத்துடன் இந்திய ரசிகர்களுக்கு மேலும் ஒரு உற்சாகம் ஊட்டும் விதமாக பாகிஸ்தான் ரசிகர்களும் இந்தியாவின் வெற்றியை எதிர்ப்பார்த்துள்ளனர். மேலும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என பாகிஸ்தான் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். காரணம், இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தினால். பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு நிலைத்து இருக்கும் என்பதுதான். அதாவது  பாகிஸ்தான் அணி இந்தியா மற்றும் ஜிம்பாபே அணிகளிடன் தோல்வி அடைந்து தற்போது புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மட்டும் குரூப்-2யில் ஒரு புள்ளிகள் கூட பெறாத அணியாக திகழ்ந்து வருகிறது.

  பாகிஸ்தான் அணி அடுத்து நெதர்லாந்து, வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட மூன்று அணிகளுடன் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. அப்படி வெற்றி பெற்றால்தான் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க முடியும், அடுத்த மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றால் அதிகபட்சமாக பாகிஸ்தானுக்கு ஆறு புள்ளிகள் கிடைக்கும்.

  இதையும் படிங்க: ஜடேஜாவை டெல்லி அணிக்கு கொடுத்துவிட்டு அங்கு இருக்கும் 2 முக்கிய வீரர்களை தூக்க சென்னை அணி திட்டம்?

  தற்போது இந்திய அணி குரூப்-2 புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மேலும் அடுத்த மூன்று போட்டிகளில் மீதமுள்ள நிலையில் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பு பிரகாசமகவே உள்ளது. அடுத்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணியுடன் தோல்வி அடைந்தால் அடுத்து வரும் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலும் 7 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.

  இதனால் நாளை நடைபெறும் இந்திய அணியுடனான போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்தால், அடுத்து வரும் பாகிஸ்தான் அணியுடன் நடைபெறும் ஆட்டம் இரண்டு அணிகளுக்குமே மிக மிக முக்கியமான போட்டி ஆகும். இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு தான் அந்த அரையிறுதி வாய்ப்பு . எப்படி பார்த்தாலும் தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணியிடம் தோல்வி அடைந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு இந்த டி20 உலககோப்பை தொடரில் அரையிறுதி வாய்ப்பு அதிகமாகவே இருக்கும் .

  இதனால்தான் இந்திய அணி- தென் ஆப்பிரிக்காவுடன் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என சமூகவலைதளங்களில் பாகிஸ்தான் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  இதற்கு இந்திய ரசிகர்களும் அவர்களை கிண்டலடித்து பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும் இந்த டி20 தொடரில் எந்த அணி எப்படி விளையாடுகிறது என்பது கூட தெரியவில்லை வங்கதேச அணி அடுத்த மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு தான் அதிக அரையிறுதி வாய்ப்பு உள்ளது என்பதையும் பாகிஸ்தான் ரசிகர்கள் நினைவில் வைத்து உள்ளார்கள்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: India, India and Pakistan, T20 World Cup