முகப்பு /செய்தி /sports / ஸ்கெட்ச் போட்டு ஷகிப் அல் ஹசனை தூக்கிய தோனி! - ரசிகர்கள் புகழாரம்

ஸ்கெட்ச் போட்டு ஷகிப் அல் ஹசனை தூக்கிய தோனி! - ரசிகர்கள் புகழாரம்


20 ஓவர் உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றி 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதனால் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பைக்கு தோனியை தவிர்த்திவிட்டு இளம் இந்திய அணியை தயார்படுத்த தேர்வுக்குழு முடிவெடுத்துவிட்டதாக கூறுகிறார் மூத்த பத்திரிக்கையாளர் மோகன்.

20 ஓவர் உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றி 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதனால் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பைக்கு தோனியை தவிர்த்திவிட்டு இளம் இந்திய அணியை தயார்படுத்த தேர்வுக்குழு முடிவெடுத்துவிட்டதாக கூறுகிறார் மூத்த பத்திரிக்கையாளர் மோகன்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகிவிட்டாலும் கேப்டன்ஸி அவரை விட்டு விலகுவதாக இல்லை.

ஆசியக் கோப்பை போட்டிகள் தொடர் துபாயில் நடந்து வரும் நிலையில், நேற்று இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

போட்டி தொடங்கி பேட்டிங்கில் களமிறங்கியது வங்கதேசம். இரண்டு விக்கெடுகளை இழந்து வங்கதேச அணியின் ஷகிப் அல் ஹசன் மற்றும் முஷ்ஃபிக்குர் ஆகியோர் களத்தில் இருந்தனர்.

அப்போது நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு திரும்பியுள்ள ஜடேஜா தன் முதல் ஓவரை வீசினார். அந்த சூழ்நிலையில் தன் அனுபவத்தையும், கூர்மையான கேப்டன்சி திறமையையும் பயன்படுத்திய தோனி, நடப்பு கேப்டன் ரோஹித் சர்மாவை அழைத்து ஷிகர் தவானை ஸ்லிப்பிலிருந்து, ஸ்கொயர் லெக் பகுதிக்கு மாற்றச் சொன்னார். ரோஹித்தும் அதன்படியே செய்தார்.

ஜடேஜா வீசிய 3-வது பந்தில் நல்ல ஃபார்மில் உள்ள ஷகிப் தவானிடம் கேட்ச் கொடுத்து ஆவுட் ஆகி வெளியேறினார். இதை கவனித்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தோனியை ட்விட்டரில் புகழ்ந்து தள்ளிவிட்டனர்.

First published:

Tags: Asia cup, Dhoni, India team