Akshar எப்படி Axar ஆனார்?- வேகப்பந்து வீச்சிலிருந்து அக்சர் படேல் ஸ்பின்னுக்கு மாறியது ஏன்?

Akshar எப்படி Axar ஆனார்?- வேகப்பந்து வீச்சிலிருந்து அக்சர் படேல் ஸ்பின்னுக்கு மாறியது ஏன்?

அக்சர் படேல்.

அன்று அக்சர் படேலின் தந்தை சமாதானம் செய்யாமல் விட்டிருந்தால் அக்சர் படேல் கிரிக்கெட்டை இழந்திருப்பார், நாம் அக்சர் படேலை இழந்திருப்போம்.

  • Share this:
இங்கிலாந்து அணியை நடப்பு டெஸ்ட் தொடரில் தனது இடது கை ஸ்பின் பவுலிங்கினால் பாடாய்ப் படுத்தி வரும் அக்சர் படேல் ஆங்கில ஸ்பெல்லிங்கில் எப்படி மாற்றம் ஏற்பட்டது என்பது ஒரு சுவாரஸ்யம் என்றால் வேகப்பந்து வீச்சிலிருந்து ஸ்பின் பவுலிங்குக்கு மாறியது வேறொரு கதையாக இருக்கிறது.

அக்சர் படேல் அகமதாபாத்திலிருந்து சற்று தொலைவில் இருக்கும் நாதியாதில் வசிக்கிறார் அக்சர் படேல்.

இது தொடர்பாக தி இந்து ஆங்கில ஊடகத்தில் வெளியான கட்டுரையின் படி, அக்‌ஷர் தனது முதல் பெயரை Akshar என்றுதான் உச்சரிக்க வேண்டும் என்று விரும்பினர், ஆனால் அது Axar என்றுதான் அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் பிசிசிஐ-யிலும் உள்ளது.

பிறந்த போதே நர்ஸ் செய்த தவறினால் அவரது பெயர் ஸ்பெல்லிங்கில் இந்த மாற்றம் எதேச்சையாக நிகழ்ந்ததாக குடும்பத்தினர் ஆங்கில ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

தன் மகன் அக்சர் படேல் காயமடைந்து விடுவான் என்று அஞ்சியே தாயார் பிரீத்தி அக்சரை கிரிக்கெட் ஆட விடமாட்டாராம்.

அக்சர் படேல் ஆனந்த் என்ற பால் மற்றும் பால் பொருட்களுக்கு பெயர் பெற்ற ஊரில் பிறந்தார். அப்போது நர்ஸ் Axar என்று ஸ்பெல்லிங்கைத் தவறாகக் கொடுத்தது இன்று வரை நிலைத்து விட்டது என்கிறார் அவரது தாயார்.

அவர் பெயரில் உள்ள இந்த ஸ்பெல்லிங் தவறை குடும்பத்தினர் மாற்ற விரும்பவில்லை. காரணம் அவர் இவ்வளவு பெரிய கிரிக்கெட் வீரராக வருவார் என்று நாங்கள் நினைக்கவில்லை, இல்லையெனில் மாற்றியிருப்போம் என்கின்றனர் அக்சர் குடும்பத்தினர்.

இடது கை வேகப்பந்து வீச்சில்தான் ஆரம்பித்திருக்கிறார் அக்சர் படேல் ஆனால் ஒருமுறை பள்ளிச்சிறுவனாக இருந்த காலத்தில் வயல்வெளியில் ஆடிய போது முழங்கால் தண்டில் நிலத்தில் கிடந்த அரிவாளினால் காயம் ஏற்பட அக்சர் படேல் அதன் பிறகு வேகமாக ஓடி வந்து வீச முடியாமல் போயுள்ளது, இதனையடுத்து வேகப்பந்து வீச்சு கனவு முடிவுற ஸ்பின்னராகியுள்ளார் அக்சர் படேல்.

ஆனால் ஒருமுறை கிரிக்கெட் லெதர் பந்தில் கண்ணில் அடி வாங்கியதில் அக்சர் படேல் பாட்டி பேரனை கிரிக்கெட் ஆடவிடக்கூடாது என்று பிடிவாதம் பிடித்தாராம். ஆனால் அக்சரின் தந்தை அனைவரையும் சமாதான செய்து அக்சர் மேலும் கிரிக்கெட்டைத் தொடர்ந்துள்ளார்.

அன்று அக்சர் படேலின் தந்தை சமாதானம் செய்யாமல் விட்டிருந்தால் அக்சர் படேல் கிரிக்கெட்டை இழந்திருப்பார், நாம் அக்சர் படேலை இழந்திருப்போம்.
Published by:Muthukumar
First published: