இந்தியா- பாகிஸ்தான் போட்டியை ரசித்த 100 மில்லியன் பார்வையாளர்கள்- ஹாட்ஸ்டார் பெருமிதம்

100 மில்லியன் பார்வையாளர்களில் சுமார் 66 சதவிகிதத்தினர் பெரும் மெட்ரோ நகரங்கள் அல்லாத பகுதிகளில் இருந்து பார்வையிட்டுள்ளனர்.

Web Desk | news18
Updated: June 24, 2019, 8:29 PM IST
இந்தியா- பாகிஸ்தான் போட்டியை ரசித்த 100 மில்லியன் பார்வையாளர்கள்- ஹாட்ஸ்டார் பெருமிதம்
100 மில்லியன் பார்வையாளர்களில் சுமார் 66 சதவிகிதத்தினர் பெரும் மெட்ரோ நகரங்கள் அல்லாத பகுதிகளில் இருந்து பார்வையிட்டுள்ளனர்.
Web Desk | news18
Updated: June 24, 2019, 8:29 PM IST
ஹாட்ஸ்டார் வரலாற்றிலேயே இல்லாத வகையில் இந்தியா- பாகிஸ்தான் உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியை சுமார் 100 மில்லியன் பேர் ஒரே நேரத்தில் பார்த்துள்ளனர்.

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 போட்டிகளை டிஜிட்டல் தளத்தில் வெளியிட அதிகாரப்பூர்வ உரிமையை ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது. கடந்த ஜூன் 16-ம் தேதி இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக்கோப்பைப் போட்டி நடைபெற்றது.

இந்த ஒரு போட்டியை மட்டும் ஹாட்ஸ்டார் தளத்தில் சுமார் 100 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர். 100 மில்லியன் பார்வையாளர்களில் சுமார் 66 சதவிகிதத்தினர் பெரும் மெட்ரோ நகரங்கள் அல்லாத பகுதிகளில் இருந்து பார்வையிட்டுள்ளனர். இந்த உலகக்கோப்பை போட்டிகள் 6 மொழிகளில் பார்வையாளர்களுக்காக உள்ளது.


ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ஹாட்ஸ்டார் வீடியோக்கள் திரையிடப்படுகின்றன. இதுகுறித்து ஹாட்ஸ்டார் தலைமை அதிகாரி வருண் நராங் கூறுகையில், “எங்களது தளத்தில் ஒரே நேரத்தில் 100 மில்லியன் பார்வையாளர்கள் பார்க்கும் வகையிலான் திறன் மிகுந்த ஸ்டிரீமிங் நெட்வொர் உள்ளது பெருமை அளிக்கிறது.

ஹாட்ஸ்டாரின் மிகச்சிறந்த தொழில்நுட்பத்தினால் ஒரே நேரத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை நாங்கள் கவர முடிந்துள்ளது. புதிய சாதனையை நாங்கள் நிகழ்த்தியுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

மேலும் பார்க்க: Mi மேக்ஸ், Mi நோட் சீரிஸ்கள் நிறுத்தப்படுகிறது- ஜியோமி தலைவர் லேய் ஜுன்
First published: June 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...