• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • நடுவர் நிதின் மேனனுக்கு 2021-ன் சிறந்த நடுவர் விருது வழங்க வேண்டும்: தினேஷ் கார்த்திக் விருப்பம்

நடுவர் நிதின் மேனனுக்கு 2021-ன் சிறந்த நடுவர் விருது வழங்க வேண்டும்: தினேஷ் கார்த்திக் விருப்பம்

நடுவர் நிதின் மேனன்

நடுவர் நிதின் மேனன்

ஐசிசி உயர்மட்ட நடுவர்கள் குழுவில் இளம் வயதில் சேர்க்கப்பட்ட பெருமைக்குரிய நிதின் மேனன் இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு தொடரில் 10 போட்டிகளில் பிரமாதமாக தன் நடுவர் பணியைச் சிறப்பாகச் செய்தார்.

 • Share this:
  ஐசிசி உயர்மட்ட நடுவர்கள் குழுவில் இளம் வயதில் சேர்க்கப்பட்ட பெருமைக்குரிய நிதின் மேனன் இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு தொடரில் 10 போட்டிகளில் பிரமாதமாக தன் நடுவர் பணியைச் சிறப்பாகச் செய்தார்.

  விராட் கோலி மற்றும் எப்போதும் இந்தியாதான் வெல்ல வேண்டும் என்று கிரிக்கெட்டின் நுட்பங்கள் அறியாத ரசிக வெறியர்களுக்கு நிதின் மேனன் சிறந்த அம்பயர் என்று தினேஷ் கார்த்திக் பாராட்டியதை ஏற்க மாட்டார்கள், ஆனால் தினேஷ் கார்த்திக் உண்மையை வெளிப்படையாகக் கூறும் தைரியமுடையவர்.

  நிதின் மேனன் அளித்த தீர்ப்புகளில் சுமார் 35 தீர்ப்புகள் மேல்முறையீட்டுக்குச் சென்றன, இதில் 2 மட்டும்தான் தவறு என்று மாற்றப்பட்டது, மற்ற அனைத்து தீர்ப்புகளும் 3ம் நடுவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

  அதுவும் விராட் கோலி போன்ற டென்ஷன் பார்ட்டிகளை வைத்துக் கொண்டு குழிப்பிட்சில் பந்துக்கு பந்து அவுட் கேட்டுக் கொண்டிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் அபாரமாகவே நிதின் மேனன் தீர்ப்பளித்தார், ஆனாலும் அவருக்கும் கோலி நெருக்கடி கொடுத்து இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவுக்கு சார்பாக சில தீர்ப்புகளை அவர் வழங்கினார். இல்லை என்று கூற முடியாது, ஆனால் அது கோலியினால்தானே தவிர அவரால் அல்ல.

  டேவிட் லாய்ட் கூறுவது போல் ‘விராட் கோலி நடுவர்களை மிரட்டுகிறார்’ என்பது பட்டவர்த்தனமான உண்மை, இந்தியாதான் வெல்ல வேண்டும் அதற்காக மோசடி செய்தாலும் பரவாயில்லை என்ற மன நிலையில் உள்ளவர்கள்தான் கோலியின் அங்க சேஷ்டைகளை ரசிப்பார்கள். ஆனால் அதை தவறு, பாரபட்ச்ம் மோசடி என்று சொல்ல மாட்டார்கள், அது அவுட் தானே என்பார்கள் இந்திய பேட்ஸ்மென்கள் என்றால் அது நாட் அவுட்தானே என்று வாதிடுவார்கள். மோசடி என்று ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

  இந்நிலையில் தினேஷ் கார்த்திக் நடுவர் நிதின் மேனனை பாராட்டிப் பேசியுள்ளார். நிதின் மேனனின் 40 தீர்ப்புகளுக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டதில் 5 தீர்ப்புதான் தவறாகிப்போனது தெரியவந்தது. மேனனுக்கு எதிரான 23 மேல்முறையீடுகள் ஏற்கப்படவில்லை. 12 தீர்ப்புகள் அம்பயர்ஸ்கால். அவரது துல்லியத்துக்கு எடுத்துக்காட்டு 35 எல்.பி. தீர்ப்புகளுக்கு எதிரான மேல்முறையீட்டில் 2 தீர்ப்புகள்தான் தவறு என்ரு மாற்றப்பட்டது.

  நிதின் மேனனின் துல்லியத்தைக் கண்ட இந்திய, இங்கிலாந்து கேப்டன்கள் அவர் தீர்ப்பை ரெஃபர் செய்வதையே குறைத்துக் கொண்டனர். நேற்று கூட விராட் கோலி 2 நிதின் மேனன் தீர்ப்புகளை மேல்முறையீடு செய்து பல்பு வாங்கினார்.

  இந்நிலையில் நடுவர்களை யார் பாராட்டுவார்கள் என்ற கேள்வி எழ, இதோ நாங்கள் இருக்கிறோம் என்று தினேஷ் கார்த்திக்கும், ஆகாஷ் சோப்ராவும் பாராட்டியுள்ளனர். வர்ணனையில் எல்.சிவராமகிருஷ்ணன் நிதின் மேனன் தீர்ப்புகளை மிகவும் பாராட்டினார்.

  தினேஷ் கார்த்திக் கூறியதாவது:

  நாம் உரியவர்களுக்கு உரிய பெருமையைச் சரியாக அளிக்க வேண்டும், இந்த ஒட்டுமொத்த தொடரிலும் ஏதாவது புதிதாகத் தோன்றியது என்றால் அந்தப் பெயர் நிதின் மேனன் தான். நம்ப முடியாத அளவுக்கு அவர் சீராகவும் துல்லியமாகவும் நடுவர் தீர்ப்புகளை வழங்கினார், இந்த ஆண்டுக்கான சிறந்த நடுவர் விருது நிதின் மேனனுக்கு அளிக்கப்பட வேண்டும். உலகின் தலைசிறந்த நடுவர்களில் நிதின் மேனன் ஒருவர்.

  ஆகாஷ் சோப்ரா மீம் பாணியில், ‘டூ நாட் ரிவியூ’ என்று எழுதிய ஒரு பலகையை வைத்த புகைப்படத்தை பகிர்ந்து நிதின் மேனன் நடுவர் பணியைப் பாராட்டியுள்ளார்.

  நிதின் மேனன் தீர்ப்பு சொன்னால் ரிவியூ செய்யாதே என்று ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: