'தோனி ‘என்ட்ரி’ ஆளுமை மோதலில் முடியாமல் இருந்தால் சரி'

தோனி - விராட் கோலி

ஐசிசி டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதை முன்னாள் லெஜண்ட் சுனில் கவாஸ்கர் வரவேற்றுள்ளார். ஆனால் கோச் ரவி சாஸ்திரிக்கும் தோனிக்கும் மோதல் ஏற்படாமல் இருந்தால் சரி என்றும் கவாஸ்கர் ஐயம் தெரிவித்துள்ளார்.

 • Cricketnext
 • Last Updated :
 • Share this:
  ஐசிசி டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதை முன்னாள் லெஜண்ட் சுனில் கவாஸ்கர் வரவேற்றுள்ளார். ஆனால் கோச் ரவி சாஸ்திரிக்கும் தோனிக்கும் மோதல் ஏற்படாமல் இருந்தால் சரி என்றும் கவாஸ்கர் ஐயம் தெரிவித்துள்ளார்.

  ஐசிசி டி20 உலகக்கோப்பை அணி நேற்று அறிவிக்கப்பட்டது, அதில் பெரிய சர்ப்ரைஸ் அறிவிப்பு அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டதுதான், அதுவும் தோனி இந்தப் பணிக்கு ஒப்புக் கொண்டதுதான் ஆச்சரியம். ஒருவேளை பெரிய தொகையாக இருந்திருக்கும். இவர் நியமனம் குறித்து வரவேற்றுள்ள சுனில் கவாஸ்கர் மோதல் ஏற்படாமல் இருந்தால் சரி என்று இன்னொரு மாறுபட்ட கருத்தையும் தெரிவித்தார்.

  இது தொடர்பாக சுனில் கவாஸ்கர் கூறும்போது, “தோனியின் தலைமையில் 2011 உலகக்கோப்பையை வென்றோம், 2007 உலகக்கோப்பை டி20 வென்றோம், நிச்சயம் அவரது வருகை இந்திய அணிக்கு பெரிய உதவியாகவே இருக்கும். 2004-ல் என்னை ஆலோசகராக நியமித்த போது அப்போதைய பயிற்சியாளர் ஜான் ரைட் பதற்றமடைந்தார், எங்கு அவரது இடத்தை நான் பறித்து விடுவேனோ என்று அவர் பயந்தார். ஆனால் இப்போது தோனிக்கு பயிற்சியாளராகவெல்லாம் ஆர்வமில்லை என்பது ரவி சாஸ்திரிக்குத் தெரியும் அதனால் மோதல் ஏற்பட வாய்ப்பில்லை.

  ரவி சாஸ்திரி, தோனி, கோலி கூட்டணி ஒன்று சேர்ந்து பணியாற்றினால் அது அணிக்கு நன்மைகள் பலவற்றைக் கொடுக்கும். ஆனால் அணித்தேர்வு மற்றும் உத்தி குறித்து நிச்சயம் ஒத்துப் போகாத கருத்து மாறுபாடுகள் இருக்கவே செய்யும், இது அணி மீது நிச்சயம் விளைவை ஏற்படுத்தும். ஆனால் தோனியின் நியமனமே இந்திய அணிக்கு பெரிய உற்சாகமூட்டக்கூடியதுதான். தோனிக்கு எல்லாம் தெரியும், அனுபவசாலி. தோனி சர்வதேச கிரிக்கெட்டில் செயல்பூர்வமாக இருந்த போது தோனியைக் காட்டிலும் அதிரடி வீரர் யாரும் இல்லை.

  இதையும் படிங்க: சாரி நடராஜன்! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்: சேத்தன் சர்மா விளக்கம் சரிதானா?
   இதையும் படிங்க: தோனி என்ட்ரி கோலிக்கு செக்?- எப்படி இருந்தா என்ன.. தல ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்

   

  இது பெரிய செய்தி, ஆனால் மோதல் ஏற்பட்டு விடக்கூடாது என்று நான் பிரார்த்தனை செய்கிறேன், ரவிசாஸ்திரியும் தோனியும் ஒரே வேவ்லெந்தில் பணியாற்றினால் அது இந்தியாவுக்கு பெரிய செய்திதான்.

  அஸ்வின் தேர்வு குறித்து...

  அஸ்வின் டி20 அணியில் தேர்வு ஆகியிருப்பது நல்ல செய்திதான். ஆனால் லெவனில் இடம்பெறுவாரா என்பது தெரியவில்லை, இங்கிலாந்தில் அவர் பிளேயிங் லெவனில் இல்லை. அதற்கு ஒரு ஆறுதலாக இப்போது டி20 உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்துள்ளனர். இங்கிலாந்து ஏமாற்றத்துகு ஒரு இழப்பீடு. பிளேயிங் லெவனில் இருக்கிறாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  இவ்வாறு கூறினார் சுனில் கவாஸ்கர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Muthukumar
  First published: