முகப்பு /செய்தி /விளையாட்டு / சாதனையின் உச்சத்தில் சச்சின் டெண்டுல்கர்… எளிதில் முறியடிக்க முடியாத ரன்கள் ரிக்கார்டு

சாதனையின் உச்சத்தில் சச்சின் டெண்டுல்கர்… எளிதில் முறியடிக்க முடியாத ரன்கள் ரிக்கார்டு

விராட் கோலி - சச்சின்

விராட் கோலி - சச்சின்

சச்சின் டெண்டுல்கர் மொத்தம் 782 இன்னிங்ஸ்களில் விளையாடி 34,357 ரன்களை எடுத்திருக்கிறார். விராட் கோலி 549 இன்னிங்ஸ்களில் விளையாடி 25,012 ரன்கள் எடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவ்வளவு எளிதில் முறியடிக்க முடியாத சாதனையை சச்சின் டெண்டுல்கர் ஏற்படுத்தியுள்ளார். அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சச்சினுக்கும் அவருக்கு போட்டியாக இருப்பவர்களுக்கும் இடையே அதிக வித்தியாசம் காணப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்களை குவித்து முதலிடத்தில் இருக்கிறார். 2ஆவது இடத்தில் இலங்கை அணியின் குமார் சங்கக்கரா 28,016 ரன்களை எடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் 27,483 ரன்களும், இலங்கையின் மகேலால ஜெயவர்த்தனே 25,957 ரன்களும் எடுத்துள்ளனர்.

தென்னாப்பிரிக்க அணியின் ஜேக்கஸ் காலிஸ் 25,534 ரன்கள் எடுத்து 5ஆவது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் பேட்ஸ்மேன் விராட் கோலி 25,012 ரன்கள் எடுத்து 6ஆவது இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் விராட் கோலியை தவிர்த்து பெரும்பாலான வீரர்கள் ஓய்வு பெற்று விட்டனர். சம காலத்தில் விளையாடும் வீரர்கள் அடிப்படையில், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 17,800 ரன்களுடன் 18ஆவது இடத்தில் இருக்கிறார். இந்த வகையில் சச்சினின் சாதனையை அவ்வளவு எளிதில் எவரும் முறியடித்து விட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் கோலிக்கு மட்டுமே அந்த வாய்ப்பு இருக்கிறது.

சச்சின் டெண்டுல்கர் மொத்தம் 782 இன்னிங்ஸ்களில் விளையாடி 34,357 ரன்களை எடுத்திருக்கிறார். விராட் கோலி 549 இன்னிங்ஸ்களில் விளையாடி 25,012 ரன்கள் எடுத்துள்ளார். சச்சினின் சராசரி 48.52 ரன்னாகவும், விராட் கோலியின் சராசரி 53.55 ரன்னாகவும் உள்ளது. சர்வதேச போட்டிகளில் சச்சின் மொத்தம் 100 சதங்களை அடித்துள்ளார். விராட் கோலி அடித்துள்ள சதங்களின் எண்ணிக்கை 74 ஆக உள்ளது. இந்த சாதனைகளை 34 வயதாகும் விராட் கோலி முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.

First published:

Tags: Cricket