ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுக்கப்பட்ட ஓவர்… வைரலாகும் பும்ரா வீடியோ

டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுக்கப்பட்ட ஓவர்… வைரலாகும் பும்ரா வீடியோ

பும்ரா

பும்ரா

தற்போது 20 ஓவர் போட்டிகளின் ஆதிக்கத்தால், முன்பை விடவும் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் சற்று அதிரடியாக ஆடத் தொடங்கியுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட மேட்ச்சின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான இந்த போட்டியில் ஸ்டூவர்ட் பிராடின் ஒவரை இந்திய அணியின் பந்து வீச்சாளர் பும்ரா விளாசித் தள்ளியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகள் பொதுவாக நிதானமான ஆட்டத்திற்கு பெயர்போனது. தற்போது 20 ஓவர் போட்டிகளின் ஆதிக்கத்தால், முன்பை விடவும் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் சற்று அதிரடியாக ஆடத் தொடங்கியுள்ளனர்.

டெஸ்டில் கடைசி விக்கெட்டுகள் களத்தில் இருக்கும்போது, பேட்ஸ்மேன் அதிரடி ஆட்டத்தை விளையாடுவார். கடைசி விக்கெட்டுகள் எளிதில் வீழ்த்தப்படும் என்பதால் முடிந்த அளவுக்கு ரன்களை குவிக்க, பேட்ஸ்மேன்கள் இந்த யுக்தியை கையில் எடுப்பார்கள்.

ICC Award : நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு பட்லர், ரஷித், அப்ரிதி பெயர்கள் பரிந்துரை

அந்த வகையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையே கடந்த ஜூன் ஜூலையில் நடைபெற்றது. இதில் 5வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸின்போது இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரை இந்திய அணியின் பும்ரா எதிர்கொண்டார்.

WATCH – FIFA WORLD CUP : ஜப்பான் – குரோஷியா ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

இந்த ஓவரில் ஒரு வைடில் பவுண்டரி, ஒரு நோபாலில் சிக்ஸர் தவிர 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடிக்கப்பட்டது. கடைசி பாலில் பும்ரா சிங்கிள் தட்டினார். பும்ரா பேட் செய்தததன் மூலம் 29 ரன்களை எடுத்தார். ஒட்டுமொத்தமாக இந்த ஒரே ஓவரில் 35 ரன்கள் எடுக்கப்பட்டது.

2003-04 ல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரைன் லாரா,தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் ராபின் பீட்டர்சன் ஓவரில் 28 ரன்களை எடுத்தார். இதுதான் டெஸ்ட் போட்டியில் ஒரு ஓவரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக இருந்தது.

இந்த 18 ஆண்டுகால சாதனையை இந்தாண்டில் பும்ரா முறியடித்துள்ளார். இந்நிலையில், பும்ராவின் அதிரடி ஆட்டம் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

First published:

Tags: Cricket, Jasprit bumrah