கராச்சி மைதானம் சென்ற இலங்கை அணிக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு

கடந்த 2009ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது இலங்கை வீரர்கள் வந்த பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்

கராச்சி மைதானம் சென்ற இலங்கை அணிக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு
கடந்த 2009ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது இலங்கை வீரர்கள் வந்த பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்
  • News18 Tamil
  • Last Updated: September 30, 2019, 8:15 PM IST
  • Share this:
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் பங்கேற்க சென்ற இலங்கை அணிக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒரு நாள் போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் ரத்து செய்யப்பட்டது. 2வது ஒரு நாள் போட்டி கராச்சி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் பங்கேற்க இலங்கை அணி மைதானத்திற்கு வருகை தந்த போது உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. துப்பாக்கிய ஏந்திய ராணுவ வீரர்கள் இலங்கை அணி சென்ற வாகனத்துக்கும் முன்னும் பின்னும் குவிக்கப்பட்டுள்ளனர்.




கடந்த 2009ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது இலங்கை வீரர்கள் வந்த பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லையென்றாலும் லேசான காயம் ஏற்பட்டது.

பாதுகாப்பு காரணமாக குறைபாடு காரணமாக இலங்கை வீரர்கள் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலமாக தாய்நாட்டிற்கு திரும்பினார். இதன்பின் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மற்ற நாடுகள் முன்வரவில்லை. இதனையடுத்து பத்து வருடங்களுக்கு பின் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Loading...




கராச்சியில் நடைப்பெற்று வரும் 2வது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிறகு 305 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் வீரர் பாபர் அஷாம் அதிகபட்சமாக 115 ரன்கள் விளாசி உள்ளார்.

Also Watch

First published: September 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...