மறக்க முடியுமா! இந்த நாளில் அன்று- ஹெர்ஷல் கிப்ஸ் முதன் முதலில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை

மறக்க முடியுமா! இந்த நாளில் அன்று- ஹெர்ஷல் கிப்ஸ் முதன் முதலில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை

ஹெர்ஷல் கிப்ஸ்.

“நான் பிரையன் லாரா டெஸ்ட் போட்டிகளில் சிலபல சிக்சர்களை விளாசியதைப் பார்த்தேன். அதே போல் நானும் செய்யலாம் என்று நினைத்தேன். இது அந்த நாளாக அமைந்தது” என்றார்.

  • Share this:
மார்ச் 16, 2007, பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு மே.இ.தீவுகளில் நடந்த 50 ஓவர் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவின் அதிரடி மன்னன் ஹெர்ஷல் கிப்ஸ் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்த முதல் வீரர் ஆனார்.

நெதர்லாந்து அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் ஹெர்ஷல் கிப்ஸ் சற்றும் எதிர்பாராத விதத்தில் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசினார். முதலில் கேரி சோபர்ஸ் 6 சிக்சர்களை அடித்தது சர்வதேச கிரிக்கெட் அல்ல. அது கவுண்டி கிரிக்கெட், ரவிசாஸ்திரி திலக் ராஜை ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்ததும் உள்நாட்டுப் போட்டியில்.

இந்நிலையில் செயிண்ட் கிட்ஸில் நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியில் நெதர்லாந்து அணிக்காக ஹெர்ஷல் கிப்ஸ் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடித்து சாதனைப் புத்தகத்தில் நுழைந்தார்.தென் ஆப்பிரிக்கா அப்போது 178/2 என்று இருந்தது, அப்போது கிப்ஸுக்குள் இருந்த அரக்கன் கண் விழித்தான். ஸ்பின்னார் டான் வான் பங்கே என்பவர் வீசிய அந்த ஓவர்தான் சிக்சர்களாக பறந்த ஓவர். இன்னிங்ஸின் 30வது ஓவரான அதன் முதல் பந்தை லாங் ஆனுக்கு மேல் தூக்கினார் கிப்ஸ். பிறகு இருமுறை லாங் ஆஃபுக்கு மேல் சிக்சர்களை வெளுத்தார், பிறகு மிட்விக்கெட் மேல் ஒரு சிக்சரைச் சொருகினார். பிறகு மீண்டும் லாங் ஆஃப் மேல் அடுத்தடுத்து 2 சிக்சர்களை ஸ்டாண்டுக்கு அனுப்பினார்.

அன்று 72 ரன்களை 40 பந்துகளில் விளாசிய கிப்ஸ் அதில் 4 பவுண்டரி, 7 சிக்சர்களை அடித்து நொறுக்கினார்.

இந்த 6 சிக்சர்களை நினைவுகூரிய ஐசிசி தன் ட்விட்டர் பக்கத்தில், “இதே நாளில் அன்று கிப்ஸ் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசினார். 40 பந்துகளில் 72 ரன்கள் விளாசினார். 40 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 353/3 என்ற மிகப்பெரிய இலக்கை எட்டியது” என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ வீடியோ வெளியிட்டது குறித்து ஹெர்ஷல் கிப்ஸ்: ‘அட்ரனலைன் ரஷ்’ என்று இன்று பதிவிட்டுள்ளார்.

“நான் பிரையன் லாரா டெஸ்ட் போட்டிகளில் சிலபல சிக்சர்களை விளாசியதைப் பார்த்தேன். அதே போல் நானும் செய்யலாம் என்று நினைத்தேன். இது அந்த நாளாக அமைந்தது” என்றார்.

இது நடந்து 6 மாதங்களில் 2007 டி20 உலகக்கோப்பையில் இந்திய வீரர் யுவராஜ் சிங், ஒரு படி மேலே போய் ஸ்டூவர்ட் பிராட் என்ற வேகப்பந்து வீச்சாளரையே 6 சிக்சர்களை ஒரே ஓவரில் விளாசினார். இப்போது வெஸ்ட் இண்டீஸின் கிரன் பொலார்ட் இலங்கைக்கு எதிராக 6 சிக்சர்களை ஒரே ஓவரில் விளாசியது குறிப்பிடத்தக்கது.
Published by:Muthukumar
First published: