காலே டெஸ்டில் இலங்கை படுதோல்வி - ஏமாற்றத்துடன் ஓய்வு பெற்ற ஹெராத்

1999-ம் ஆண்டு காலே மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஹெராத், தனது கடைசி போட்டியிலும் அதே மைதானத்தில் விளையாடியுள்ளார்.

Web Desk | news18
Updated: November 10, 2018, 12:06 PM IST
காலே டெஸ்டில் இலங்கை படுதோல்வி - ஏமாற்றத்துடன் ஓய்வு பெற்ற ஹெராத்
ரங்கனா ஹெராத்
Web Desk | news18
Updated: November 10, 2018, 12:06 PM IST
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி படுதோல்வியடைய, முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் ஏமாற்றத்துடன் ஓய்வு பெற்றார்.

இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் இந்த டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற இருந்த நிலையில், அணியின் தோல்வி அவருக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிகாலே டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டை வீழ்த்திய ஹெராத், அந்த மைதானத்தில் மட்டும் 102 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதன்மூலம், ஒரே மைதானத்தில் 100 விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். முரளிதரன் மற்றும் ஆண்டர்சன் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்திருந்தனர். மேலும், ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலிலும் 8-வது இடத்துக்கு ஹெராத் முன்னேறியுள்ளார்.

1999-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காலே மைதானத்தில் அறிமுகமான ஹெராத், 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 433 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
போட்டி முடிந்ததும் இலங்கை வீரர்கள் ஹெராத்தை தோளில் தூக்கிக்கொண்டு மைதானத்தை வலம் வந்தனர். ரசிகர்களும் கைதட்டி, உற்சாக குரல் எழுப்பி அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

Loading...

டெஸ்ட் போட்டிகளில் ஹெராத்தின் பங்களிப்பு:டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் முரளிதரன், வார்னே மற்றும் கும்ளே மட்டுமே டாப் 5 இடத்தில் உள்ளனர்.

170 இன்னிங்சில் பந்து வீசிய பின்னர் ஆஸ்திரேலியாவின் வார்னே மற்றும் ஹெராத் ஓர் ஒப்பீடு:முரளிதரன் உடன் விளையாடிய ஹெராத், முரளிதரன் ஓய்வுக்கு பின் விளையாடிய ஹெராத் ஓர் ஒப்பீடு:கடந்த 5 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர்கள்:Also See..

First published: November 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...