• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • நடராஜனை தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுரை

நடராஜனை தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுரை

தங்கராசு நடராஜன்

தங்கராசு நடராஜன்

  • Last Updated :
  • Share this:
    இந்திய வேகப்பந்து வீச்சாளர் நடராஜனை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். வெளிநாட்டில் இருந்து திரும்பி இருப்பதால் நடராஜனை தனிமைப்படுத்தி கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    மேலும் நடராஜன் உடன் கைகுலுக்கி கொள்வதற்கும் அவருக்கு சால்வை அணிவிக்கவும் வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சேலம் சின்னம்பட்டியை சேர்ந்த நடராஜன் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடி அனைவரது பாராட்டுகளையும் பெற்றவர்.

    ஆஸ்திரேலியாவிலிருந்து இந்திய அணி நாடு திரும்பி உள்ள நிலையில் சின்னம்பட்டியில் நடராஜனுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிக அளவில் கூட்டம் கூடும் என்பதால் தற்போது இந்த விழாவை நடத்த வேண்டாமென்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: