• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்திய கிரிக்கெட் அணிக்கு ரவிசாஸ்திரி பிரியாவிடை: ஒப்பந்த நீட்டிப்பை விரும்பவில்லை

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரவிசாஸ்திரி பிரியாவிடை: ஒப்பந்த நீட்டிப்பை விரும்பவில்லை

விராட் கோலி - ரவி சாஸ்திரி

விராட் கோலி - ரவி சாஸ்திரி

டி20 உலகக்கோப்பை தொடரோடு, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி, பிரியாவிடை கொடுக்கப்போவதாக முன்னணி நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

  • Share this:
    டி20 உலகக்கோப்பை தொடரோடு, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி, பிரியாவிடை கொடுக்கப்போவதாக முன்னணி நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

    இவருடன் பந்து வீச்சு பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர் ஆகியோரும் தங்கள் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை என்று தெரிகிறது.

    முன்னணி ஆங்கில நாளேட்டின் தகவல்களின் படி இது தொடர்பாக ரவிசாஸ்திரி, பாரத் அருண், ஸ்ரீதர் ஆகியோர் பிசிசிஐ தரப்பிடம் தெரிவித்து விட்டதாகவும் ஐபிஎல் அணியுடன் பயிற்சியாளர் பதவிக்கு பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

    Also Read: 'இனியவளே என்று பாடிவந்தேன்... இனி அவள்தான் என்று ஆகி விட்டேன்': அனுஷ்கா சர்மா குறித்து விராட் கோலி நெகிழ்ச்சி

    பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பொறுப்புக்கு பிசிசிஐ விண்ணப்பங்களை வரவேற்றுள்ள நிலையில் தற்போது அதன் தலைமையில் இருக்கும் ராகுல் திராவிட் இந்திய சீனியர் அணியின் பயிற்சியாளராக வாய்ப்புள்ளதாக ஊகங்கள் எழுந்துள்ளன.

    ராகுல் திராவிட் முன்பு இந்த இலங்கை தொடரைத் தாண்டி தான் எதுவும் யோசிக்கவில்லை என்று கூறினார், ஆனால் தான் ஆடும் காலத்தில் சக வீரராகவும் கேப்டனாகவும் இருந்த சவுரவ் கங்குலி இப்போது பிசிசிஐ தலைவராக இருப்பதால் திராவிடை அவர் சம்மதிக்க வைப்பார் என்ற ஹேஷ்யங்களும் ஓடிக்கொண்டிருக்கின்றன.

    இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு அதிகபட்ச வயது 60. மே மாதம் சாஸ்திரி 59 வயதை எட்டினார். இதனால் அவர் மேலும் தொடர முடியாது என்பதால் அவர் பிரியாவிடை கொடுக்கப் போகிறார் என்ற செய்திகள் வலம் வருகின்றன.

    அனில் கும்ப்ளேவுடன் கோலிக்கு முட்டிக் கொள்ள கும்ப்ளே பெருந்தன்மையாக விலக ரவிசாஸ்திரி அணிப் பயிற்சியாளரானார், 2014 முதல் 2016 வரை அணியின் இயக்குநராக சாஸ்திரி செயல்பட்டார்.

    ரவிசாஸ்திரியின் பயிற்சியின் கீழ் இந்தியா இருமுறை ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றது, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிக்கு முன்னேறியது, ஐசிசி உலகக்கோப்பையில் இங்கிலாந்தில் அரையிறுதி வரை முன்னேறியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ரவிசாஸ்திரி பயிற்சியின் கீழ் கோலியின் தலைமையில் இந்திய அணி கொடிநாட்டி வருகிறது, இங்கிலாந்தில் தற்போது தொடரை வென்றால் ரவி சாஸ்திரி-கோலி தலைமைக்கு ஒரு முத்தாய்ப்பாக அமையும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: