ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

யுவராஜ் சிங் என்னை விட மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்... நெதர்லாந்து வெற்றிக்கு பின் ரோஹித் சர்மா பதில்

யுவராஜ் சிங் என்னை விட மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்... நெதர்லாந்து வெற்றிக்கு பின் ரோஹித் சர்மா பதில்

ரோஹித் சர்மா - யுவராஜ் சிங்

ரோஹித் சர்மா - யுவராஜ் சிங்

T20 World Cup | நெதர்லாந்து வெற்றிக்கு பின் கேப்டன் ரோஹித் சர்மா பேசுகையில் யுவராஜ் சிங் குறித்த கேள்விக்கு வேடிக்கையாக பதிலளித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி 2-வது வெற்றியை நேற்று பதிவு செய்தது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நெதர்லாந்தை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

  இந்திய அணி ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அரைசதத்தால் 20 ஓவர் முடிவுக்கு 2 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து விளையாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

  இந்தப் போட்டியின் போது, ​​டி20 உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த யுவராஜ் சிங்கின் சாதனையை கேப்டன் ரோஹித் சர்மா முறியடித்தார். யுவராஜ் 33 சிக்ஸர்களையும், ரோஹித் 34 சிக்ஸர்களையும் அடித்திருந்தார். டி20 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் சிக்ஸர்களின் சாதனையை முறியடித்தது குறித்து ரோஹித் சர்மாவிடம் கேட்டதற்கு, அவர் மிகவும் வேடிக்கையான பதிலை அளித்தார். ரோஹித் கூறுகையில், ஆம், அவர் இதனால்  யுவராஜ் சிங் மகிழ்ச்சியடையப் போவதில்லை என்று எனக்குத் தெரியும் என்று வேடிக்கையாக தெரிவித்தார்.

  Also Read :ரியல் மிஸ்டர் பீனை அனுப்பவும்.. ஜிம்பாப்வே அதிபருக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் பிரதமர்

  நெதர்லாந்து அணி உடனான வெற்றிக்கு பின் ரோஹித் சர்மா கூறுகையில், பாகிஸ்தான் அணி உடனான சிறப்பான வெற்றிக்கு பின் எங்களுக்கு அதிக நேரம் கிடைத்தது. நாங்கள் சிட்னிக்கு வந்து ஒரு குழுவாக பயிற்சியை மேற்கொண்டோம். இன்றைய போட்டியின் மிக அதிக கவனம் செலுத்தினோம். அதனை களத்தில் இறங்கி சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினோம்.

  நாங்கள் ஆரம்பத்தில் மெதுவாக விளையாடினோம். ஆரம்பத்தில் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்ததால் அப்படி விளையாடினோம். பின்னர் விராட் மற்றும் சூர்யகுமார் அதிரடி ரன்ரேட்டை உயர்த்தியது. வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்துவோம்“ என்றும் கூறினார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Rohit sharma, T20 World Cup, Yuvaraj Singh