வாகா எல்லையில் நடந்து கொண்டிருந்த தோனியை நாங்கள்தான் உள்ளுக்குள் இழுத்தோம்: முஷாரப்பை அசத்திய கங்குலியின் பதில்

சவுரவ் கங்குலி

முன்னாள் இந்திய கேப்டன் தோனிக்கு உலகம் நெடுகும் ரசிகர்கள் இருந்தாலும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தோனியின் நீளமான முடி வைத்திருக்கும் ஹேர்ஸ்டைலுக்கு ரசிகர் என்பது பலரும் அறியாதது.  தோனியின் ஆட்டமும் அவரை வியக்க வைத்தது.

 • Share this:
  முன்னாள் இந்திய கேப்டன் தோனிக்கு உலகம் நெடுகும் ரசிகர்கள் இருந்தாலும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தோனியின் நீளமான முடி வைத்திருக்கும் ஹேர்ஸ்டைலுக்கு ரசிகர் என்பது பலரும் அறியாதது.  தோனியின் ஆட்டமும் அவரை வியக்க வைத்தது.

  கங்குலி அப்போது கேப்டன், எதிர்கால வீரர்கள் வளர்த்தெடுத்ததோடு தலைமை தாங்கும் பண்புகளையும் வீரர்களிடத்தில் வளர்த்தார் கங்குலி, அப்படி உருவானவர்கள்தான் சேவாக், தோனி போன்றவர்கள்.

  2006 பாகிஸ்தான் தொடரின் போது அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கும், கேப்டன் கங்குலிக்கும் இடையே நடந்த உரையாடல் ஒன்று இப்போது வைரலாகி வருகிறது.

  கங்குலியிடம் முஷாரப் கேட்டதென்னவெனில் ‘தோனியை எங்கேருந்து பிடிச்சீங்க?’ எங்கிருந்து தோனியை கண்டுப்பிடித்தீர்கள் என்ற ரீதியில் கேட்டதாகத் தெரிகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதற்குக் கங்குலி முஷாரப்பையே அசத்துமாறு பதில் அளித்தார்,

  இந்த சம்பவத்தை 2018-ல் ஒரு நிகழ்ச்சியில் கங்குலி நினைவு கூர்ந்த போது, கூறுகையில், “எனக்கு இன்னமும் நினைவில் உள்ளது, பர்வேஸ் முஷாரப் என்னிடம் எங்கிருந்து தோனியைப் பிடித்தீர்கள்? என்றார். தோனி வாகா எல்லையில் நடந்து கொண்டிருந்தார் நாங்கள் அவரை உள்ளுக்குள் இழுத்தோம் என்று என்று நான் பதிலளித்தேன்” என்றார் கங்குலி.

  Also Read: நான் பிரதமராகி இருந்தால்... சவுரவ் கங்குலி கூறிய தருணம்

  மேலும் அந்த நிகழ்வில் தோனியைப் புகழ்ந்த கங்குலி, “தோனி இன்னொரு சாம்பியன், 12-13 ஆண்டுகள் அபாரமான கரியர். இன்று கூட அவர் பந்தை ஸ்டேடியத்துக்கு வெளியே அடிப்பார் என்றே நான் நம்புகிறேன். ஒரு அபூர்வ கிரிக்கெட் வீரர் தோனி” என்றார்.
  Published by:Muthukumar
  First published: