ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ரிஷப் பந்த் ‘கார்டு’ மார்க்கை ஸ்மித் அழிக்கவில்லை, ஏதாவது சொல்லணுமேன்னு சொல்லாதீங்க: டிம் பெய்ன் பதில்

ரிஷப் பந்த் ‘கார்டு’ மார்க்கை ஸ்மித் அழிக்கவில்லை, ஏதாவது சொல்லணுமேன்னு சொல்லாதீங்க: டிம் பெய்ன் பதில்

ஸ்டீவ் ஸ்மித்.

ஸ்டீவ் ஸ்மித்.

ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த் இந்திய அணியின் 406 ரன்களை விரட்டி விடுவார் என்ற நிலை ஏற்பட்டு ஆஸ்திரேலிய அணியினரின் ஈரக்குலை நடுங்கக் தொடங்கியது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சிட்னி டெஸ்ட் போட்டியின் 5ம் நாள் ஆட்டத்தில் ரிஷப் பந்த் 97 ரன்களை 118 பந்துகளில் அதிரடியாக விளாசி போட்டியை ஆஸி.யிடமிருந்துப் பிடுங்கிச் சென்றார்.

  கடைசியில் அஸ்வின், விஹாரி இணைந்து 259 பந்துகளை ஆடி டிரா செய்து ஆஸி.யை வெறுப்பேற்றி விட்டனர்.

  ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த் இந்திய அணியின் 406 ரன்களை விரட்டி விடுவார் என்ற நிலை ஏற்பட்டு ஆஸ்திரேலிய அணியினரின் ஈரக்குலை நடுங்கக் தொடங்கியது. அப்போது குளிர்பான இடைவேளைக்காக பந்த், புஜாரா சென்றிருந்த போது ஸ்டீவ் ஸ்மித் கிரீசருகே வந்து சுற்றிலும் பார்த்து விட்டு கார்டு அடையாளத்தை மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

  பந்த் மீண்டும் வந்து புதிதாகக் கார்டு எடுக்க வேண்டியதாயிற்று, கார்டு எவ்வளவு முக்கியம் என்பது ஸ்டீவ் ஸ்மித்துக்குத் தெரியாதா? ஏன் இந்த சில்லரை வேலை என்று ரசிகர்கள் அவர் மீது சமூக ஊடகங்களில் பாய்ந்தனர்.

  விரேந்திர சேவாகும், ‘கார்டை மாற்றி என்னவெல்லாமோ செய்யப் பார்த்தார்கள், ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை’ என்று ஸ்மித் சேட்டையை விமர்சித்திருந்தார்.

  இந்நிலையில் டிம் பெய்ன் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்:

  இது குறித்து நான் ஸ்டீவ் ஸ்மித்திடம் பேசினேன், அவர் மிகவும் ஏமாற்றமடைந்தார், அதாவது தன் செயல் எப்படி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது என்பதில் அவருக்கு ஏக வருத்தம். ஆனால் ஸ்மித் அடிக்கடி இப்படிச் செய்வார், அவரது வழக்கம் அது, ரிஷப் பந்த் மார்க்கை சிதைக்கவில்லை அவர்.

  ஸ்டீவ் ஸ்மித் ஆடும்போது பார்த்தால் இது தெரியும், அவர் வழக்கமாகச் செய்வதுதான், இதில் ஒன்றும் தவறிருப்பதாக எனக்குப் படவில்லை.

  பேட்டிங் கிரீசில் நின்று அவர் பேட் செய்தால் என்ன செய்ய வேண்டும் என்று தன்னையே தான் காட்சிப்படுத்திக் கொள்ளும் ஒரு நிழல் பயிற்சிதான் அது.

  நிச்சயமாக அவர் ரிஷப் பந்தின் கார்டு மார்க்கை அழிக்கவில்லை, அப்படிச் செய்தால் இந்திய அணி இதனை மேலிடத்துக்கு புகாருக்கு எடுத்துச் சென்றிருப்பார்கள்.

  அவர் டெஸ்ட்டில் மட்டுமல்ல உள்நாட்டு கிரிக்கெட்டிலும் இப்படி நிழல் பேட்டிங் செய்து பார்ப்பார். பேட்டிங்கின் போது அவர் பல விஷயங்களைச் செய்வார், அப்படிப்பட்ட ஒன்றுதான் இதுவும், பந்த் மார்க்கைப் போய் இவர் ஏன் அழிக்க வேண்டும்?

  அது அவரது மேனரிஸம் அவ்வளவே, என்றார் டிம் பெய்ன்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: India vs Australia, Rishabh pant, Steve Smith, Sydney