பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத் வெள்ளிக்கிழமை காலமான தனது முன்னாள் சக வீரர் ஷேன் வார்னுக்கு இதயப்பூர்வமான குறிப்பை வெளியிட்டார். மெக்ராத் மற்றும் வார்னே இருவரும் ஒன்றாக நிறைய கிரிக்கெட் விளையாடினர் மற்றும் அவர்களின் முன்மாதிரியான பந்துவீச்சினால் ஆஸ்திரேலியாவுக்காக பல போட்டிகளில் வெற்றி பெற்றனர். இருவரும் சக வீரர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களாக களத்திலும் வெளியேயும் சிறந்த உறவைப் பகிர்ந்து கொண்டனர்.
ஸ்டீவ் வாஹ், ஷேன் வார்னையும் கிளென் மெக்ராவையும் அருமையாகப் பயன்படுத்திக் கொண்டார். ஸ்டீவ் வாஹ் கேப்டன்சியில்தான் வார்ன் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இத்தனைக்கும் ஸ்டீவ் வாஹ் ஆஸ்திரேலியப் பிட்ச்களை பேட்டிங்குக்கு சாதகமாக்கினார். ஏனெனில் மெக்ரா, வார்ன் எந்த பிட்ச்சிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி பெற்றுத் தந்து விடுவார்கள்.
வெள்ளிக்கிழமை தாய்லாந்தின் கோ சாமுய் என்ற இடத்தில் உள்ள சொகுசு விடுதியில் வார்னே இறந்தார். மெக்ரா ட்விட்டரில் வார்ன் வாழ்க்கையை விடவும் பெரிய குணச்சித்திரம் என்று பாராட்டினார்.
இருவரும் சேர்ந்து நிறைய விக்கெட்டுகளைக் குவித்துள்ளனர், மெக்ரா பந்து வீசும்போது ஏற்படுத்தும் காலடி த் தடங்களைப் பயன்படுத்தி பால் ஆஃப் த செஞ்சுரி முதல் பல பேட்டர்களை அந்த இடத்தில் பிட்ச் செய்து அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையையே சிக்கலுக்குள்ளாக்கியுள்ளார் ஷேன் வார்ன்.
இந்நிலையில் கிளென் மெக்ரா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த உணர்ச்சிகர அஞ்சலியில் கூறியிருப்பதாவது:
இன்று முற்றிலும் நொறுங்கிப் போய்விட்டேன். வார்னி வாழ்க்கையை விட பெரியவர். அவருக்கு எதுவும் நடக்காது என்று நினைத்தேன். பெரும்பாலான மக்கள் 20 வயதில் வாழ்வதை விட அவர் தனது வாழ்க்கையில் அதிகமாக வாழ்ந்தார். அவர் ஒரு கடும் போட்டியாளராக இருந்தார். ஆட்டம் ஒருபோதும் தோல்வியடைய அவர் விட மாட்டார், விடா முயற்சியுடன் எங்கிருந்து வேண்டுமானாலும் வெல்லலாம் என்பதே அவரது பவுலிங் மீதான நம்பிக்கை. தோல்வியிலிருந்து திருப்பி எங்களை வெற்றிக்கு கொண்டு வர முடியும் என்று அவர் நினைத்தார்,
அதை அவர் பல முறை செய்தார். அவர் தனது வாழ்க்கையை அப்படித்தான் வாழ்ந்தார் என்று நினைக்கிறேன். ஒருபோதும் மந்தமான தருணம் இல்லை என்று தோன்றியது. அவர் ஒரு சிறந்த வாழ்க்கைத் துணை மற்றும் அன்பான தந்தை. அவர் தனது குழந்தைகளை மிகவும் நேசித்தார். எனது எண்ணங்கள் ப்ரூக், ஜாக்சன் & சம்மர் ஆகியோருடன் உள்ளன. என் எண்ணங்கள் கீத், பிரிட்ஜெட் & ஜேசன் ஆகியோரிடமும் உள்ளன. நிம்மதியாக இருங்கள் என் நல்ல நண்பரே, உங்களைப் போல் யாரும் இனி யாரும் பிறக்கப்போவதில்லை.
இவ்வாறு கூறினார் கிளென் மெக்ரா.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.