India vs England| சச்சினுக்கு ஃபோன் போடுங்க கோலி: முன்னாள் வீரர் அட்வைஸ்

விராட் கொலி

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர், லெஜண்ட் ஜேம்ஸ் ஆண்டர்சனின் செல்லப்பிள்ளையாகி விட்டார் விராட் கோலி, 23 இன்னிங்சில் 7 முறை அவரிடம் ஆட்டமிழந்துள்ளார்.

  • Share this:
    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர், லெஜண்ட் ஜேம்ஸ் ஆண்டர்சனின் செல்லப்பிள்ளையாகி விட்டார் விராட் கோலி, 23 இன்னிங்சில் 7 முறை அவரிடம் ஆட்டமிழந்துள்ளார்.

    புஜாரா 10 முறை ஆண்டர்சனிடம் ஆட்டமிழந்துள்ளார். லீட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 7 ரன்னில் ஆன்டர்ஸன் பந்துவீச்சில் மிட் ஆஃபில் டிரைவ் ஆட முயன்று எட்ஜ் ஆகி வெளியேறினார்.

    நாட்டிங்ஹாமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆன்டர்ஸன் பந்துவீச்சில் தான் சந்தித்த முதல்பந்திலயே விக்கெட்டை இழந்து கோலி வெளியேறினார்.

    2014-ல் ஆஃப் ஸ்டம்புக்கு மிக நெருக்கமாக வந்த ஸ்விங் பந்துகளில் அவுட் ஆனார் கோலி, ஆனால் இந்த முறை 4,5,6ம் ஸ்டம்புகளுக்கு போடப்படும் பந்துகளிலும் அவுட் ஆகத் தொடங்கியுள்ளது கவலையளிப்பதாக உள்ளது என்கிறார் சுனில் கவாஸ்கர்.

    ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லேயன் பந்துவீச்சிலும் இதேபோன்று கோலி 7 முறை ஆட்டமிழந்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்து பயணம் போன்று இந்த முறையும் இங்கிலாந்து சோகமான பயணமாக கோலிக்கு அமைந்துவிடும்போல் தெரிகிறது.

    50 இன்னிங்ஸ்களாக சதம் அடிக்கவில்லை, 2 ஆண்டுகள் ஆகிவிட்டது சதம் எடுத்து. இன்னும் கொஞ்ச நாள் போனால் கோலி அரைசதம் எடுத்து இவ்வளவு நாளாகி விட்டது, 25 எடுத்து இவ்வளவு மாதங்களாகி விட்டது என்றெல்லாம் செய்திகள் வரும் முன் கோலி ஆட்டத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இல்லையெனில் அம்போதான், இங்கெல்லாம் அடிக்காமல் உள்நாட்டில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசத்தைக் கூப்பிட்டு புரட்டி எடுப்பதில் என்ன பயன்?

    இந்நிலையில் சுனில் கவாஸ்கர் கோலிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

    “கோலி உடனடியாக சச்சின் ரமேஷ் டெண்டுல்கருக்கு போன் செய்து தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க வேண்டும். கோலியின் நிலை எனக்கு கவலையளிக்கிறது.

    2014-ல் அவர் ஆஃப் ஸ்டம்புக்கு அருகில் வரும் பந்துகளில் அவுட் ஆகிக் கொண்டிருந்தார். இப்போது மேலும் வெளியே செல்லும், அதாவது 5, 6, 7-ம் ஸ்டம்புக்கு வரும் பந்துகளுக்கு மட்டையை நீட்டி எட்ஜ் ஆகி வெளியேறுகிறார்.

    ஆஃப் ஸ்டம்பில் இத்தகைய பந்துகளை வீசி அவருக்கு வலை விரிக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    2004 தொடரில் ஆஸ்திரேலியாவில் சச்சின் இப்படித்தான் ஆட்டமிழந்து கொண்டிருந்தார், ஆனால் சிட்னி டெஸ்ட்டில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை தொடுவதில்லை என்று சபதம் எடுத்து ஆடினார், கவர் ட்ரைவ் ஆடவேயில்லை, ஆடக்கூடாது என்று கட்டுப்பாட்டுடன் ஆடி இரட்டைச் சதம் எடுத்தார், ஆகவே கோலி சச்சின் புத்தகத்திலிருந்து அந்தப் பகக்த்தை மட்டும் உருவிக் கொள்வது நல்லது” என்றார் சுனில் கவாஸ்கர்.
    Published by:Muthukumar
    First published: