பார்மில் இல்லாத அஜிங்கிய ரகானே இந்திய டெஸ்ட் அணியில் இவ்வளவு காலம் நீடித்திருப்பதே அதிசயம் என்றும் அதிர்ஷ்டம் என்றும் கவுதம் கம்பீர் சாடியுள்ளார். இந்தியா -நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டிக்கு அஜிங்கிய ரகானே தான் கேப்டன். கோலி 2வது டெஸ்ட் போட்டிக்குத்தான் திரும்புகிறார்.
நாளை மறுநாள் கான்பூரில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி குறித்து கவுதம் கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்குக் கூறும்போது, “நான் மயங்க் அகர்வால், கே.எல்.ராகுலுடன் தொடங்குவேன், புஜாரா, ஷுப்மன் கில், ரகானே என்று லைன் ஆப் இருக்கும். ஆனால் ரகானே தன்னை நிரூபிக்க வேண்டும், வாய்ப்பை சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
ரகானே அணியில் நீடிப்பதே அவர் கேப்டன் என்பதால் தான். இது அவரது அதிர்ஷ்டம். இன்னொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது அவர் நிச்சயம் இதை பயன்படுத்திக் கொள்வார் என்றே நம்புகிறேன்” என்றார் கவுதம் கம்பீர்.
இப்போதைய அணியில் அயல்நாட்டு பிட்ச்களில் அதிக சராசரி வைத்திருப்பவர் ரகானேதான். 36 ஆல் அவுட் ஆகி தோற்ற போது அடிலெய்டுக்குப் பிறகு அணியை மெல்போர்னில் தன் சதம் மூலம் வெற்றி பெறச் செய்து தொடரையே ஆஸ்திரேலிய மண்ணில் கைப்பற்றியதை யாரும் மறக்க முடியாது, கோலி இருந்திருந்தால் கூட சந்தேகம்தான். ஏனெனில் இளம் வீரர்களை நம்பி வாய்ப்பளித்தார் ரகானே, கோலி அப்படி செய்திருக்க மாட்டார்.
இங்கிலாந்தில் 4 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 112 ரன்களையே எடுத்தார் ரகானே, லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 61 ரன்களை தைரியமாக நின்று எடுத்தது அந்த டெஸ்ட் போட்டியில் 60 ஒவர்களில் இங்கிலாந்தை சுருட்டி அபார வெற்றி பெற்றதன் முக்கியப் பங்களிப்பாகும். இப்படி வெறும் பங்களிப்பு செய்யும் ரோலில் இருந்து ரகானே ரிட்டையர் ஆவதற்குள் ஒரு பெரிய வீரராகி தன் கரியரை நிறைவு செய்ய வேண்டும் என்பதே அவர் மீதான எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
ரவி சாஸ்திரி எப்படி பேட்டிங் ஆலோசனை வழங்குவார் என்று தெரியாது, ஆனால் ராகுல் திராவிட் நிச்சயம் ஒரு பெரிய கோச், அவரை முன் வைத்து ரகானே தன் பேட்டிங் கோளாறுகளையெல்லாம் களைந்து கொள்ள அருமையான வாய்ப்பு கிட்டியுள்ளது, இவருக்கும் புஜாராவுக்கும் இதுவே கடைசி தொடர், இல்லையெனில் ஷ்ரேயஸ் அய்யர் நிச்சயம் உள்ளே வருவார், இன்னும் எத்தனையோ வீரர்கள் காத்திருக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ajinkya Rahane, Test cricket