• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பணத்துக்காக நாட்டையே விற்றவர் பேசலாமா?- ஹர்பஜன், முகமது ஆமீர் கடும் மோதல்

பணத்துக்காக நாட்டையே விற்றவர் பேசலாமா?- ஹர்பஜன், முகமது ஆமீர் கடும் மோதல்

ஆமிர்-ஹர்பஜன் இடையே கடும் வாக்குவாதம்

ஆமிர்-ஹர்பஜன் இடையே கடும் வாக்குவாதம்

  • Share this:
    இந்திய அணி பாகிஸ்தானிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றாலும் தோற்றது ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டது போல் அதைச் சுற்றி நிகழும் அவதூறுகளும், ஏச்சுகளும் பேச்சுகளும் முகம் சுளிக்க வைப்பதோடு தரம் தாழ்ந்த நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது.

    இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது குறித்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.இந்த நிலையில் இதனைக் குறிப்பிட்டு இந்திய வீரர் ஹர்பஜன் சிங், ஆசியக் கோப்பையில் முகமது அமீர் பந்தில், தான் சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்த வீடியோவைப் பதிவிட்டார்.

    பதிலுக்கு இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் ஹர்பஜன் சிங் பந்துவீச்சில் 4 பந்தில், 4 சிக்ஸர்களை ஷாகித் அப்ரிடி அடித்த வீடியோவை அமீர் பகிர்ந்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நீண்டது. இந்த வாக்குவாதம் அசிங்கமான தெருச்சண்டை, குழாயடிச் சண்டை மட்டத்துக்கு தரம் தாழ்ந்துள்ளதாக இதனை கிரிக்கெட் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

    முகமது ஆமீரை ஹர்பஜன் சிங் ஒரு கட்டத்தில் அவமானச் சின்னம் என்றும் நாகரீகமற்றவர் என்றும் கிரிக்கெட்டை விற்றவர் என்றும் சாடத் தொடங்கி விட்டார். “நான் இந்தச் சேற்றுக்குள் இறங்க விரும்பவில்லை. இறங்கினால் நானும் அழுக்காகி விடுவேன். என்னுடன் பேசக்கூட தகுதி இல்லாதவர், அவர் நான் பேசக்கூடிய தரத்துக்கு அவர் இல்லை.

    அவரிடம் பேசப்பேச என்னை நானே தரம் தாழ்த்திக் கொள்வதாகவே முடியும். அவரைப்பற்றி நான் இனியும் பேச விரும்பவில்லி, அவர் ஒரு அவமானச் சின்னம். கிரிக்கெட் மீது அவர் குத்திய கரும்புள்ளியை யாரும் மறக்க முடியாது. தன் சுயமரியாதையும் நாட்டின் கவுரவத்தையும் கிரிக்கெட்டையும் விற்றவர் அவர். லார்ட்ஸில் வேண்டுமென்றே நோபால் போட்டு பணம் சம்பாதிக்கப் பார்த்தார். நான் உன்னுடைய ட்வீட்டுக்கு ரியாக்ட் செய்திருக்க கூடாது, ஏனெனில் நீ நாகரீகமற்றவர்.

    நீ உன் மட்டில் மகிழ்ச்சியுடன் இரு, வெளியே போ. அதிகம் பேசாதே, சமூக ஊடகத்தில் பாயாதே. நீயும் உன் 5 ஆதரவாளர்களும் உங்கள் பத்திரிகையாளர்களும்! என்ன மாதிரியான ஜர்னலிஸம் அங்கு உள்ளது என்று தெரிந்து விட்டது. நாட்டையே விற்ற ஒரு வீரருக்கு அவர்கள் ஆதரவு தருகிறார்கள். வெல் டன்” என்று ஹர்பஜன் சிங் கடுமையாக சாடியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: