Home /News /sports /

இந்தியாவுக்காக 100 டெஸ்ட்கள் ஆடுவார், அப்படி அவரை உருவாக்குவேன் - ரிக்கி பாண்டிங் ஆச்சரியப்படும் வீரர்

இந்தியாவுக்காக 100 டெஸ்ட்கள் ஆடுவார், அப்படி அவரை உருவாக்குவேன் - ரிக்கி பாண்டிங் ஆச்சரியப்படும் வீரர்

ரிக்கி பாண்டிங்

ரிக்கி பாண்டிங்

“பிரிதிவி ஷா ஆடுவதைப் பார்க்கும் போது என்னிடம் நான் ஆடும்போது என்னென்ன திறமைகள் இருந்ததோ அத்தனையும் உள்ளதைப் பார்த்து அகமகிழ்ந்தேன்.

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் எல்லா காலத்திலும் சிறந்த பேட்டர்களில் ஒருவர். அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். 47 வயதான அவர் ஒரு கேப்டனாக இரண்டு உலகக் கோப்பை பட்டங்களை வென்றுள்ளார் மற்றும் 2003 இல் உலகக் கோப்பை பட்டத்தை வெல்லும் இந்தியாவின் நம்பிக்கையை அழிப்பவராக இருந்தார்.இப்போது டெல்லி கேப்பிடல்ஸின் தலைமைப் பயிற்சியாளராக வர் பிரிதிவி ஷா பற்றித்தான் இவ்வாறு கூறுகிறார்.

    பிரிதிவி ஷா இந்தியாவுக்காக முதல் டெஸ்ட் போட்டியை மே.இ.தீவுகளுக்கு எதிராக ஆடி அறிமுக சதம் விளாசியவர், பிற்பாடு பல்வேறு காரணங்களினால் அவரால் தொடர்ச்சியாக ஆட முடியவில்லை கோலி கேப்டன்சியில் நியூசிலாந்துக்கு கடைசியாக பயணம் மேற்கொண்ட போது 2 டெஸ்ட் போட்டிகளில் 3 அரைசதம் விளாசிய ஒரே வீரர் பிரிதிவி ஷா தான், அதன் பிறகு பிட்னெஸ் தோல்வி, ஆஸ்திரேலியாவில் 2 இன்னிங்ஸ்களிலும் குச்சி கழன்றது ஆகியவற்றினால் டெஸ்ட் அணியினில் நுழைய முடியவில்லை. ஆனால் டெல்லி கேப்பிடல்ஸுக்காக அவர் வெளுத்துக் கட்டி வருகிறார்.

    டெல்லி கேப்பிடல்ஸ் பிரிதிவி ஷா


    இந்நிலையில் பிரித்வி ஷா பற்றி பாண்டிங் கூறும்போது, “பிரிதிவி ஷா ஆடுவதைப் பார்க்கும் போது என்னிடம் நான் ஆடும்போது என்னென்ன திறமைகள் இருந்ததோ அத்தனையும் உள்ளதைப் பார்த்து அகமகிழ்ந்தேன். பிரிதிவி ஷாவை இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகள் ஆடும் வீரராக நான் உருவாக்கி விட்டால் என் பணி முடிந்தது மனநிறைவுடன் நான் பணி செய்ததாக எனக்கு திருப்தி ஏற்படும்.

    நான் சுற்றியிருக்கும் அணிகளைத் திரும்பிப் பார்த்தால், நான் மும்பை இந்தியன்ஸை பயிற்சியளித்த போது, ​​ரோஹித் மிகவும் இளமையாக இருந்தார், ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை, க்ருனால் விளையாடவில்லை. நான் அங்கு பயிற்சியளித்த நிறைய வீரர்கள் இப்போது இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்கள், அதைத்தான் நான் இங்கே செய்ய விரும்புகிறேன்.” என்றார் ரிக்கி பாண்டிங்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Delhi Capitals, IPL 2022, Prithvi Shaw

    அடுத்த செய்தி