• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • என்னுடன் ஒப்பிட ஹர்திக் பாண்டியா தகுதியற்றவர்- கபில் தேவ் சொன்ன தருணம்

என்னுடன் ஒப்பிட ஹர்திக் பாண்டியா தகுதியற்றவர்- கபில் தேவ் சொன்ன தருணம்

பாண்டியா-கபில்தேவ்

பாண்டியா-கபில்தேவ்

ஹர்திக் பாண்டியாவை இன்று கபில் தேவுடன் ஒப்பிட்டால் அது மிகப்பெரிய தவறான ஒப்பீடாகும் ஆனால் அவர் வந்த புதிதில் பேட்டிங்கில் கபிலின் ஜாடை இருந்தது அதை வைத்து ஒருசிலர் அவசரக்குடுக்கை தனமாக ஹர்திக் பாண்டியாவை அடுத்த கபில்தேவ் என்று ஒப்பிட்டனர், ஆனால் கபில் தேவ் அதனை ஏற்காமல் தடுத்தாட்கொண்டார்.

  • Share this:
    இப்போது பாண்டியா பவுலிங்கும் செய்வதில்லை, கடும் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் இனி யாரும் அவரை அடுத்த கபில் என்று ஒருநாளும் கூறப்போவதில்லை, அந்தத் தன்மையை பாண்டியா இழந்து விட்டார், அவருக்கு கிரிக்கெட்டை விட வேறு சில விஷயங்கள் பெரிதாகி விட்டதாகவே தெரிகிறது.

    வந்த புதிதில் நல்ல பீல்டிங், அதிரடி பேட்டிங், பவுலிங் என்று பாண்டியா அசத்தினார். தென் ஆப்பிரிக்கா தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் 95 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார். 2018 தொடரில் அதே டெஸ்ட்டுக்குப் பிறகு 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அசிங்கமாக அவுட் ஆனார். 2வது இன்னிங்சில் பாண்டியா ரன் அவுட் ஆனார். அது ஒரு மோசமான ரன் அவுட். ஏனெனில் அவர் மட்டையை தரையில் வைக்கவில்லை, கிரீசுக்குள் வைக்கவில்லை. தூக்கியபடியே மட்டை இருந்தது.

    அப்போது கபில் தேவ் கடுப்பாகி ஏபிபீ நியூஸ் சேனலில் கூறும்போது, “பாண்டியா இதே போல் சில்லித்தனமாக தவறுகள் செய்து கொண்டிருந்தால் அவர் என்னுடன் ஒப்பிடப்படுவதற்கு தகுதியானவர் அல்ல. அவரிடம் நிறைய திறமைகள் உள்ளன, அதை முதல் டெஸ்ட் போட்டியில் காட்டினார். ஆனால் அவர் மனரீதியாக சரியான அணுகுமுறையை வளர்த்தெடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கபில் கடுமையாகச் சாடினார்.

    ஹர்திக் பாண்டியா முதுகு காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டதிலிருந்தே முழுநிறைவான கிரிக்கெட் வீரர் என்ற தகுதியை இழந்து விட்டார். 11 டெஸ்ட் போட்டிகள், 63 ஒருநாள் போட்டிகள், 54 டி20 சர்வதேசப் போட்டிகளில் ஆடியிருக்கும் பாண்டியா அணியில் இனி ரெகுலராக இடம்பெறுவதே கடினம் என்ற நிலைக்குச் சென்று விட்டார்.

    நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்கா தொடருக்கு வருவாரா என்று தெரியவில்லை. எது எப்படியோ இன்னொரு போத்தம், இன்னொரு இம்ரான், இன்னொரு ரிச்சர்ட் ஹாட்லி, இன்னொரு கபில்தேவ், இன்னொரு கேரி சோபர்ஸ், இன்னொரு பிராட்மேன், இன்னொரு ரிச்சர்ட்ஸ், இன்னொரு லாரா, இன்னொரு லில்லி இவையெல்லாம் சாத்தியமேயில்லை என்பது வந்தவுடனேயே தூக்கி உயரே நிறுத்தும் மனப்போக்கு கொண்ட பத்திரிகையாளர்கள் மனதிலிருந்து அகன்றால் தேவலை என்று தோன்றுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: