• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஒரு கையில் பாகிஸ்தானை ஜெயிப்பார்- சேவாக் ஆதரிக்கும் வீரர் யார் தெரியுமா?

ஒரு கையில் பாகிஸ்தானை ஜெயிப்பார்- சேவாக் ஆதரிக்கும் வீரர் யார் தெரியுமா?

சேவாக்

சேவாக்

  • Share this:
    இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை முதல் போட்டியில் இந்திய அணி தேர்வு பெரிய சிரமமான ஒன்று, ஏனெனில் அனைவரும் பார்மில் உள்ளனர், ஒருவரை விடுத்து இன்னொருவரை தேர்வு செய்து அதனால் பேக்ஃபயர் ஆகிவிட்டதென்றால் நாளை ஹாஷ்டேக்குகள் உருவாகி விமர்சனங்கள் வரும்.

    எனவே விராட் கோலிக்கு கேப்டனாகக் கடினமே. காரணம் ஹர்திக் பாண்டியாவா, ஷர்துல் தாக்கூரா என்ற விவாதம் போய்க்கொண்டிருக்கிறது, ஹர்திக் பாண்டியா என்றால் பேட்டிங் மட்டும்தான், ஷர்துல் என்றார் பவுலிங், பேட்டிங் இரண்டும் செய்வார், குறிப்பாக பவுலிங்கில் முக்கிய கட்டங்களில் பிரமாதமாக விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்கு அசத்தலாகத் திகழ்ந்தார்.

    இந்நிலையில் விரேந்திர சேவாக் ஒரு வீரரைத் தேர்வு செய்தாக வேண்டும் அவர் யார் என்று நீங்கள் கருதுவீர்கள் என்று கேட்டால் அது ஹர்திக் பாண்டியாதான், அவர் போட்டியை ஒருதலைப்பட்சமானதாக மாற்றும் திறமை கொண்டவர் என்கிறார் சேவாக் ஆனால் ஹர்திக் சமீபமாக தடவி வருவதும் ஒரு சிக்கல்தான், எனவே அவரை நம்புவதும் கடினம், நம்பாமல் உட்காரவைப்பதும் கடினம்.

    சரி யார் ஹர்திக் பாண்டியாவா, ஷர்துல் தாக்குரா? என்ற கேள்விக்கு சேவாக், “நான் ஹர்திக் பாண்டியாவைத்தான் அணியில் எடுப்பேன், அவர் போட்டியை ஒருதலைப்பட்சமானதாக மாற்றி விடுவார். பினிஷ் செய்வார். அவர் திறமையை பல முறை வெளிப்படுத்தியுள்ளார். பவுலிங் போட முடிந்தால் இன்னும் அபாயகரமான வீரர்.

    ஐந்து பவுலர்களுடன் இறங்க வேண்டும், ஹர்திக் பாண்டியா வீச வேண்டும் இல்லையெனில் டாப் ஆர்டரில் யாராவது வீச வேண்டும். அதுதான் துல்லியமான அணியாக இருக்கும். அவர் பேட்டிங் ஒரு கவலைதான், ஆனால் நெட்டில் சரியாக ஆடவில்லை எனில் வேறொரு பேட்டரை தேர்வு செய்யலாம். மற்றபடி ஹர்திக் பாண்டியாவைத்தான் நான் முதலில் தேர்வு செய்வேன்.

    ஐபிஎல் 2021-ல் ஹர்திக் பாண்டியா நல்ல பார்மில் இல்லை. சிங்கிள் ஓவர் கூட வீசவில்லை. இதனையடுத்து இந்திய அணியில் அவரது இடமே கேள்விக்குறியானது. ஆனால் ஹர்திக் பாண்டியா பியூர் பேட்ஸ்மெனாக அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    Also Read: கோலியெல்லாம் பயமில்ல, ரோகித் சர்மா, பும்ரான்னா பயம்: யூனிஸ் கான்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: