அபிநந்தனைப் போன்ற மிகப்பெரிய ஹூரோவை எனது வாழ்நாளில் பார்த்ததே இல்லை: அஸ்வின்!

Haven’t seen a bigger hero than #Abhinandan in my lifetime: #Ashwin | அபிநந்தன், இன்று (மார்ச் 1) மாலை 5.30 மணியளவில் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அபிநந்தனைப் போன்ற மிகப்பெரிய ஹூரோவை எனது வாழ்நாளில் பார்த்ததே இல்லை: அஸ்வின்!
அபிநந்தன் மற்றும் அஸ்வின்.
  • News18
  • Last Updated: March 1, 2019, 8:13 PM IST
  • Share this:
அபிநந்தனைப் போல் மிகப்பெரிய ஹூரோவை எனது வாழ்நாளில் பார்த்ததே இல்லை என தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புகழாரம் சூட்டியுள்ளார்.

பாகிஸ்தான் விமானத்துக்கு மிக் ரக போர் விமானம் மூலம் பதிலடி கொடுத்த இந்திய விமானி அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார். இந்திய விமானியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என இந்திய அரசு கேட்டுக்கொண்டது.

Abhinandan, அபிநந்தன்
பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய அபிநந்தன்.பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், “அமைதிக்கான நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தன் விடுதலை செய்யப்படுகிறார்” என்று தெரிவித்தார். அதன்படி, லாகூரில் இருந்து காரில் அழைத்துவரப்பட்ட அபிநந்தன், இன்று (மார்ச் 1) மாலை 5.30 மணியளவில் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Abhinandan, அபிநந்தன்
உலக அளவில் ட்விட்டரில் டிரெண்டான #WelcomeBackAbhinandan ஹேஷ்டேக்.


இந்நிலையில், அபிநந்தனை வரவேற்கும் விதமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ட்விட்டரில், “உங்களைப் பெற்றதால் நாங்கள் எவ்வளவு பெருமை அடைகிறோம்!, உங்களது திறமைக்கும், தைரியத்துக்கும் தலை வணங்குகிறேன் நாங்கள் உங்களை விரும்புகிறோம். ஏனென்றால், நீங்கள் அவ்வளவு பெருமைக்குரியவர்,” என்று உருக்கமாக கூறியிருந்தார்.


இந்நிலையில், தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டரில், “இந்தப் பூமியில் அபிநந்தனைப் போன்ற மிகப்பெரிய ஹூரோவை எனது வாழ்நாளில் பார்த்ததே இல்லை” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.இதேபோல், அபிநந்தனை வரவேற்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைப் உள்ளிட்ட பலர் ட்வீட் செய்துள்ளனர்.

உங்களது தைரியத்துக்கு தலை வணங்குகிறேன்: அபிநந்தனை உருக்கமாக வரவேற்ற சேவாக்!

ஆஸி.க்கு பதிலடி கொடுக்க இந்திய அணியில் முக்கிய மாற்றம்!

Also Watch...

First published: March 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading