HOME»NEWS»SPORTS»cricket haven not seen a bold asian team on a tougher australia tour wasim akram congratulates india mut

ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஆடியதிலேயே இந்திய அணியைப் போல் தைரியம் காட்டிய ஆசிய அணி இல்லை: வாசிம் அக்ரம் பாராட்டு

இந்திய அணியின் தைரியத்தைப் பற்றி பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் வியந்து பேசியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஆடியதிலேயே இந்திய அணியைப் போல் தைரியம் காட்டிய ஆசிய அணி இல்லை: வாசிம் அக்ரம் பாராட்டு
இந்திய அணியின் தைரியம்: வாசிம் அக்ரம் பாராட்டு.
  • Share this:

இது வரை துணைக்கண்டத்திலிருந்து சென்று ஆஸ்திரேலியாவில் ஆடிய எந்த அணியும் இந்த இந்திய அணி போல் தைரியமான அணியாக இருந்ததாக தனக்குத் தெரியவில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் சுல்தான் ஆஃப் ஸ்விங் வாசிம் அக்ரம் இந்திய அணியைப் பாராட்டியுள்ளார்.

இந்திய அணியின் தைரியத்தைப் பற்றி பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் விதந்தோதியபோது கூறியதாவது:

“இந்தியாவுக்கு மிகப்பெரிய டெஸ்ட் தொடர் வெற்றி. கடினமான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அங்கு சென்று ஆடியதிலேயே இந்த இந்திய அணியைப் போன்ற தைரியமான அணியைப் பார்த்ததில்லை.



எந்த ஒரு பின்னடைவும் இந்திய அணியை நிறுத்த முடியவில்லை. முன்னணி வீரர்கள் காயமடைந்தனர். 36 ஆல் அவுட்டுக்குப் பிறகே மிகப்பிரமாதமான மீட்டெழுச்சி. இத் மற்றவர்களுக்கும் உத்வேகம் அளிக்கும், kudosஇந்தியா!”

என்று பாராட்டி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விராட் கோலி போல் அஜிங்கிய ரஹானே வீரர்களை அச்சுறுத்துவதில்லை, போட்டிக்குப் போட்டி வீரர்களை மாற்றுவது, தனக்கு அடுத்தபடியான கேப்டன்சி ஆட்கள் அணியிலிருந்தால் அவர்களை உட்கார வைப்பது போன்றவற்றுக்காக கோலி மீது விமர்சனங்கள் இருந்தன.  ரஹானேயிடம் எந்த ஒரு தவறான அணுகுமுறையும் இல்லை. கோலி, ரஹானேவையே உட்கார வைத்தார். ஆரம்பத்தில் புஜாராவின் ஸ்கோரிங் ரேட்டைக் காரணம் காட்டி அவரையும் உட்கார வைத்துப் பார்த்தார். ஆனால் கடந்த முறை ஆஸ்திரேலியாவில் புஜாரா 3 சதங்களை அடித்தார்.

ரிஷப் பந்த்திடம் அவரது இடம் குறித்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி அவரது ஆட்டத்தையே பின்னடைவு காணச் செய்தார் விராட். ரிஷப் பந்த்தின் பேட்டிங், கீப்பிங் பற்றி வெளிப்படையாக ஊடகங்களிடம் விமர்சித்தது ரிஷப் பந்த்துக்கு நெருக்கடியை அதிகரித்தார் என்ற விமர்சனங்கள் கோலிக்கு எதிராக உண்டு. ஆனால் அடிலெய்ட் டெஸ்ட்டுக்குப் பிறகு ரஹானே, ரிஷப் பந்த்தை அணியில் சேர்த்தார். ரவி சாஸ்திரி அவரிடம் ‘நீ ஒரு மேட்ச் வின்னர்’ என்று கூறி உற்சாகப்படுத்தினார்.

அஸ்வின் போன்ற கேப்டன்சி திறமைப் படைத்த வீரரை ஒருநாள், டி20-யிலிருந்து மெல்ல மெல்ல கழற்றி விட்டார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு கோலி நாடு திரும்ப, ரஹானேவின் அமைதியான நிதானமான ஆனால் கறார் கிரிக்கெட் நிபுணத்துவம் பெற்ற கேப்டன்சி உத்திகளுடன் ஆஸ்திரேலியாவை அதன் மண்ணிலேயே முன்னணி வீரர்கள் இல்லாமலேயே தொடரை வெல்லச் செய்தது பெரிய தைரியம் என்று பாராட்டப்பட்டு வருகிறது.

பொதுவாக விராட் கோலி தான் தைரியமான கேப்டன் என்பது போல் பேசப்பட்டது. அவர் இந்தியா திரும்பியவுடன் என்ன ஆகப்போகிறதோ இந்திய அணி என்றெல்லாம் ஊடகங்கள் எழுதின. ஆனால் அவரை விடவும் தைரியத்தை ஊட்டிய கேப்டன் ரஹானே என்பது இப்போது இந்த வெற்றியில் தெரிய வந்துள்ளது.

 
Published by:Muthukumar
First published: