• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இப்படி பண்றீங்களேமா... செல்போனை தராததால் தடையா? ஜெயசூரியா புதிய விளக்கம்!

இப்படி பண்றீங்களேமா... செல்போனை தராததால் தடையா? ஜெயசூரியா புதிய விளக்கம்!

சனத் ஜெயசூர்யா. (AFP)

சனத் ஜெயசூர்யா. (AFP)

Always Maintained A High Degree Of Integrity: #SanathJayasuriya | சனத் ஜெயசூரியாவுக்கு 2 ஆண்டுகளுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் செயல்பாடுகளிலும் ஈடுபட ஐசிசி தடை விதித்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சிம்கார்டு மற்றும் செல்போனை தராததால் ஐசிசி 2 ஆண்டுகள் தடை விதித்துவிட்டதாக இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.

    இலங்கை கிரிக்கெட் வாரியம் சமீபகாலமாகவே ஊழல் மற்றும் சூதாட்டத்தில் சிக்கித் தவித்து வருவதாக கூறப்படுகிறது. அந்நாட்டு அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான சனத் ஜெயசூரியா, ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    Sri Lanka Cricket, இலங்கை கிரிக்கெட் அணி
    இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி. (AP)


    இது குறித்து, விசாரணை நடத்தியது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) ஊழல் தடுப்பு அமைப்பு , சனத் ஜெயசூரியாவுக்கு 2 ஆண்டுகளுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் செயல்பாடுகளிலும் ஈடுபட தடை விதித்தது.

    இதுகுறித்து ஐசிசி வெளியிட்ட அறிவிப்பில், “ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஊழலுக்கு எதிரான நடத்தை விதிகளை மீறியது” உள்ளிட்ட காரணங்களால் தடை விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.



    இந்நிலையில், ஐசிசி தடை குறித்து ஜெயசூரியா அதிரடி விளக்கம் அளித்துள்ளார். அவர் பதிவிட்ட ட்வீட்டில், “ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். என்னுடைய சிம்கார்டு மற்றும் செல்போனை கேட்டார்கள், நான் தரவில்லை. வேறு எந்த ஊழல் குற்றச்சாட்டுகளையும் அவர்கள் கண்டறியவில்லை,” என்று கூறியுள்ளார்.



    மேலும், “கிரிக்கெட்டில் எப்போதும் நேர்மையாக இருந்ததாகவும், ஐசிசி விதித்த தடையை ஏற்றுகொள்வதாகவும் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.

    இந்தியா - பாக். கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடக்கும்: ஐசிசி சூசகம்!

    VIDEO: தோனியைப் பார்த்து வாயைப் பிளந்த ஆஸி. பவுலர்!

    Also Watch...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: