• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 world cup| அன்று ஷமி, இன்று ஹசன் அலி: நெட்டிசன்கள் வசை வலையில் சிக்கினார்

T20 world cup| அன்று ஷமி, இன்று ஹசன் அலி: நெட்டிசன்கள் வசை வலையில் சிக்கினார்

ஹசன் அலி விட்ட கேட்ச்.

ஹசன் அலி விட்ட கேட்ச்.

வசையை நெட்டிசன்களில் ஒரு பகுதியினர் ஆதரவிக்கவில்லை, அவர்கள் ஒரு வீரரை இப்படி அவமதிப்பு செய்யலாமா? கேட்ச் விடுவது, பவுலிங் அமைவதெல்லாம் போட்டியில் சகஜமான விஷயம் என்று ஹசன் அலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தான் அணி தோற்றது, தோற்கும் போது யாராவது ஒரு வீரரை இலக்காக்கி வசைப்பாடும் ஒரு மோசமான கலாச்சாரம் நெட்டிசன்களிடையே உள்ளது. அன்று இந்தியாவின் முகமது ஷமி பெயர் அவதூறு செய்யப்பட்டது, நேற்று தோற்றதற்காக பாகிஸ்தான் பவுலர் ஹசன் அலியின் பெயர் வதைபடுகிறது.

    நேற்று ஹசன் அலி மேத்யூ வேடிற்கு கேட்ச் ஒன்றை விட்டார், அவர் கேட்சை விட்ட அடுத்த 3 பந்துகளில் 3 சிக்சர்கள் ஆட்டமும் அதோடு முடிந்தது, ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை சந்திக்கிறது. ஹசன் அலி கேட்சை பிடித்திருந்தால் முடிவு வேறாக இருந்திருக்கும் என்று கேப்டன் பாபர் ஆசம் கூறப்போக நெட்டிசன்கள் ஹசன் அலியை வறுக்காத குறைதான். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எத்தனை அவதூறுகள், துஷ்பிரயோகங்கள், கெட்ட வார்த்தைகள்!

    கேட்சை விட்டது மட்டுமல்ல ஆஸ்திரேலியாவுக்கு 5 ஓவர்களில் 62 ரன்கள் தேவை என்ற நிலையில் தேவைக்கும் கூடுதலாகவே ஹசன் அலி 2 ஓவர்களில் 27 ரன்களை விட்டுக் கொடுக்க ஆட்டமே மாறிப்போனது. இதோடு கேட்சையும் விட்டாரா அவ்வளவுதான் பாகிஸ்தான் ரசிகர்கள் கொந்தளித்து விட்டனர். பாவம் வேண்டுமென்றே கேட்சை விடுவாரா, அவர் வேகமாக ஓடி வந்ததில் கொஞ்சம் கூடுதலாக ஓடி வந்து விட்டார் இதனால் கேட்சை எடுக்க முடியாமல் கோட்டை விட்டார்.









    இது வேறு, ஷாகின் அப்டீரி அடுத்த 3 பந்துகளில் சிக்ஸ் கொடுத்தது வேறு கதை, இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்பவர்கள்தான் ரசிகர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஆனால் அவர் மீதான வசையை நெட்டிசன்களில் ஒரு பகுதியினர் ஆதரவிக்கவில்லை, அவர்கள் ஒரு வீரரை இப்படி அவமதிப்பு செய்யலாமா? கேட்ச் விடுவது, பவுலிங் அமைவதெல்லாம் போட்டியில் சகஜமான விஷயம் என்று ஹசன் அலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: