உலகக்கோப்பை போட்டியுடன் தோனி ஓய்வா? தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கம்!

Has #MSDhoni signalled for retirement? #MSKPrasad REVEALS | நீண்ட இடைவெளிக்குப்பின், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் களமிறங்கிய தோனி அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்தினார்.

news18
Updated: February 11, 2019, 8:39 PM IST
உலகக்கோப்பை போட்டியுடன் தோனி ஓய்வா? தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கம்!
ஆட்டமிழந்து வெளியேறும் தோனி. (BCCI)
news18
Updated: February 11, 2019, 8:39 PM IST
2019 உலகக்கோப்பை போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக தோனியிடம் இருந்து தகவல் வந்ததா என்ற கேள்விக்கு, தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி கடந்த ஓராண்டாக பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார். குறிப்பாக, அவரது பேட்டிங் பார்ம் குறித்து அதிகம் விமர்சிக்கப்பட்டது.

விக்கெட் கீப்பராக தன்னை நிலைநிறுத்திய தோனியால், பேட்ஸ்மேனாக ஜொலிக்க முடியவில்லை. கடந்த 2017-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் தோனி 87 பந்துகளை சந்தித்து 65 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு, தோனியால் அரைசதம் கூட அடிக்க முடியவில்லை.

Dhoni, தோனி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தொடர் நாயகன் விருதை தோனி பெற்றார். (ICC)


கடந்த 2018-ம் ஆண்டு முழுவதும் ஒரு அரை சதம் கூட அடிக்க முடியாமல் தோனி தடுமாறினார். அந்த ஆண்டில் அவரின் அதிகபட்ச ரன்கள் ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் எடுத்ததுதான். தோனியின் பேட்டிங் சராசரி 25 ஆக இருந்தது.

பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தோனி களம் கண்டார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர், மைதானத்தில் இறங்கிய அவர், அடுத்தடுத்து அரைசதம் அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

Dhoni Stumping, தோனி ஸ்டம்பிங்
நியூசிலாந்து வீரர் டிம் செய்பெர்டை மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்த தோனி. (BCCI)


அதன்பிறகு, நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி, உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக உள்ளார். இவருக்கு வயது 37. அதனால், இந்த உலகக்கோப்பை உடன் ஓய்வு பெறுவார் என்று தகவல்கள் பரவி வருகின்றன.

இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், “தோனியின் ஓய்வு குறித்து நிச்சயமாக இதுவரை நாங்கள் ஆலோசனை செய்யவில்லை. உலகக்கோப்பை தொடர் நெருங்கிவிட்டதால் இதுபோன்றவை குறித்து பேசி திசைதிருப்ப நினைக்கவில்லை. தற்போது, உலகக்கோப்பை நோக்கியே எங்களது எண்ணம் உள்ளது” என்று தெரிவித்தார்.

Video: காலில் விழுந்த ரசிகர்... தேசியக் கொடியை தாங்கிப்பிடித்த தோனி..!

Also Watch..

First published: February 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...