முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘சுப்மன் கில்லை விட ஹேரி ப்ரூக் சிறந்த பேட்ஸ்மேன்’ – ஆஸ்திரேலிய வீரர் லபுஸ்சேன் கருத்து

‘சுப்மன் கில்லை விட ஹேரி ப்ரூக் சிறந்த பேட்ஸ்மேன்’ – ஆஸ்திரேலிய வீரர் லபுஸ்சேன் கருத்து

ஹேரி ப்ரூக் - சுப்மன் கில்

ஹேரி ப்ரூக் - சுப்மன் கில்

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று ப்ரூக் 329 ரன்கள் குவித்துள்ளார். அவரை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி ரூ. 13.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சுப்மன் கில்லை விட இங்கிலாந்து அணியின் ஹேரி ப்ரூக் சிறந்த பேட்ஸ்மேன் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மார்னஸ் லபுஸ்சேன் கூறியுள்ளார். ஆஸ்திரேலி கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்திய அணி 2 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி 3 ஆவது போட்டியிலும் வெற்றி பெற்றது. 4ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் வியாழன் அன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி படுதோல்வியை சந்தித்தது. டெஸ்ட் தர வரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தபோதும், இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் அதனால் 3 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கேப்டன் பாட் கம்மின்ஸ் சொந்த அலுவல் காரணமாக ஆஸ்திரேலியா திரும்பியுள்ள நிலையில், ஸ்டீவ் ஸ்மித் அணியை வழி நடத்தி வருகிறார். இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுஸ்சேன் முக்கிய ஆட்டக்காரராக அந்த அணிக்கு பலம் சேர்க்கிறார்.

சமீபத்தில் லபுஸ்சேன் அளித்த நேர்காணலின்போது, பேட்டிங்கில் அடுத்த சூப்பர் ஸ்டார் சுப்மன் கில்லா? அல்லது ஹேரி ப்ரூக்கா என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த லபுஸ்சேன். நிச்சயமாக ஹேரி ப்ரூக் தான். அவர் பேட்டிங் செய்யும் ஸ்டைல் அற்புதமாக இருக்கும். நான் கூறியிருக்கும் பதில் பிரபலம் அடையாமல் போகலாம். ஆனால் கில்லை விட ஹேரி ப்ரூக் சிறந்த பேட்ஸ்மேன் என்று தெரிவித்தார். இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திராக ஹேரி ப்ரூக் வளர்ந்து வருகிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று ப்ரூக் 329 ரன்கள் குவித்துள்ளார். அவரை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி ரூ. 13.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

First published:

Tags: Cricket