டி20 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் இக்கட்டான கட்டத்தில் ரன் அவுட் ஆனது போட்டியின் முடிவை மாற்றியது. முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரிட்சை நடத்தியது. இந்தப்போட்டியில் 173 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணியால் 167 ரன்களே எடுக்க முடிந்தது. ஆஸ்திரேலியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப்போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த இந்திய கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் 52 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். இந்த விக்கெட் போட்டியின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஹர்மன் ப்ரீத் கவுர் இரண்டாவது ரன்னை முடிக்கும் போது பேட் தரையில் சிக்கியது சில இன்ச்களில் க்ரீஸை நெருங்க முடியாமல் ரன் அவுட்டானார். இந்த விக்கெட் இந்திய ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.
இந்திய அணியின் தோல்விக்கு பிறகு ஐசிசி தனது இன்ஸ்டாகிராமில் பதிந்த ஒரு போஸ்ட் தற்போது பேசுபொருளாகியுள்ளது. ஹர்மன் ப்ரீத் கவுரின் ரன் அவுட்டையும் 2019-ல் நடந்த 50-ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையில் தோனி ரன் அவுட் ஆனதையும் க்ளப் செய்து ஐசிசி வீடியோ வெளியிட்டது. பல கோடி இதயங்களை உடைத்த ரன் அவுட் என்ற கேப்ஷனுடன் அதனை பகிர்ந்து இருந்தது. இதனையடுத்து இந்த ஓப்பீடே தவறு என கிரிக்கெட் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
அந்த போஸ்டில் இந்த இரண்டு ரன் அவுட்டையும் ஒப்பிடாதீர்கள். ஹர்மன் ப்ரீத் கவுர் ரொம்ப சாதாரணமாக ஓடினார். கண்டிப்பாக இரண்டு ரன்களை எடுத்திருக்க முடியும். தோனி கடினமான இரண்டு ரன்களை முயன்றார். தன்னால் முடிந்த அனைத்தையும் அவர் செய்தார் ஆனால் சில இன்ச்களில் அந்த ரன் அவுட் அமைந்துவிட்டது. அதனை இதோடு ஒப்பீடாதீர்கள்.
Also Read: எல்லாரும் கொஞ்சம் வாயை மூடுறீங்களா.. கே.எல்.ராகுலுக்கு ஆதரவாக களமிறங்கிய கவுதம் கம்பீர்
தோனி தன்னுடைய 100 சதவீதத்தை கொடுத்தார். ஹர்மன் ப்ரீத் விக்கெட்டை இழக்க வேண்டும் என ஓடுவது போல் இருந்தது. இந்த ரன் அவுட் ஹர்மன் ப்ரீத் சோம்பேறித்தனத்துக்கு உதாரணமாக மாறிவிட்டது என சிலர் கூறியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dhoni, Harmanpreet kaur, MS Dhoni, Run out