முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘தூசியை கூட தங்கமாக மாற்ற ஹர்மன்பிரீத் கவுரால் முடியும்’ – சொல்கிறார் ரீமா மல்ஹோத்ரா

‘தூசியை கூட தங்கமாக மாற்ற ஹர்மன்பிரீத் கவுரால் முடியும்’ – சொல்கிறார் ரீமா மல்ஹோத்ரா

மும்பை அணி வீராங்கனைகளுடன் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் (வலது ஓரத்தில் இருப்பவர்)

மும்பை அணி வீராங்கனைகளுடன் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் (வலது ஓரத்தில் இருப்பவர்)

மகளிர் பிரிமியர் லீக் போட்டிகளை கலர்ஸ் தமிழ், ஜியோசினிமா, ஸ்போர்ட்ஸ்18 - 1, ஸ்போர்ட்ஸ்18 கேல், கலர்ஸ் கன்னட சினிமா ஆகியவற்றில் நேரலையில் காணலாம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை மும்பையில் உள்ள பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணியினர் 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. TATA WPL பிளேஆஃப்ஸில் இடம்பிடித்த முதல் அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றது. இது அவர்கள் பெற்ற ஐந்தாவது தொடர் வெற்றியாகும். மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 51 ரன்கள் (30பந்துகள், 7x4, 2x6) எடுத்த நிலையில், தன்னுடைய அணியை முன்னணியில் கொண்டு செல்ல 162 ரன்கள் எடுக்க பெரிதும் உதவினார். யாஸ்திகா பாட்டியா 44 ரன்களும்(37 பந்துகள், 5x4. 1x6) மற்றும் நாட் ஸ்கிவர்-ப்ரன்ட்டின் 36 ரன்களும் (31பி, 5x4, 1x6) எடுத்து ஆட்டத்தை மொத்தமாக மாற்றினர்.இவர்களை அடுத்து விளையாடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணியினர் 9 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கிவர்-பிரண்ட் மற்றும் ஹேலி மேத்யூஸ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஸ்போர்ட்ஸ்18 மற்றும் ஜியோசினிமாவின் WPL நிபுணரான ரீமா மல்ஹோத்ரா கூறியதாவது, ஹர்மன்பிரீத் கவுரின் சிறப்பான ஆட்டத்தை விமர்சியாக பாராட்டினார். "ஊதா நிற தொப்பியை பெற்ற ஹர்மன்ப்ரீத் மும்பை அணியின் கேப்டனாக இருப்பினும் அவர் ஒரு சிறந்த பேட்டர் என்பதை அனைவரும் அறிய வேண்டும். அவரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியின் இன்னிங்ஸை கட்டமைக்கும் விதம் மிகவும் சிறப்புடையதாகும். முக்கியமாக எதிர் அணியினர் போடும் பந்துக்கு எப்படி அடித்தால் ரன்கள் எடுக்க முடியும் என்று தெளிவாக ஹர்மன்ப்ரீத் தெரிந்தது வைத்திருக்கிறார்.

ஹர்மன்ப்ரீத் ஒரு விசயத்தை கையில் எடுத்தால் அது தங்கமாக மாறும் என்று நான் நினைக்கிறேன். மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஐந்து போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம் பிளேஆஃப்களுக்குத் தகுதி பெற்றுள்ளது” என்று ஸ்போர்ட்ஸ்18 மற்றும் ஜியோசினிமாவின் WPL நிபுணரான ரீமா மல்ஹோத்ரா கூறினார்.

மும்பையின் பந்துவீச்சு நுணுக்கங்கள் போட்டியில் வெற்றி பெற அவர்களின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாகும். மேலும் அவர்கள் முன்னணி விக்கெட்டுகள் பட்டியலில் முதல் மூன்று இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். ஸ்போர்ட்ஸ்18 மற்றும் ஜியோசினிமாவின் WPL நிபுணரான புனம் ரவுத், அவர்களின் தற்போதைய வெற்றி வரிசையில் பந்தின் மூலம் அவர்களின் செயல்திறன் எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்துக்காட்டினார், “மும்பை இந்தியன்ஸ் - இன் பந்துவீச்சு தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. நான் ஹர்மன்பிரீத்திடம் இதுபற்றி பேசினேன். அவர்களின் அனுபவங்களின் காரணமாக அவர்களின் பந்துவீச்சு அவர்களின் பேட்டிங்கை விட வலிமையாக இருப்பதை நான் உணர்கிறேன். அதனால்தான் அவர்கள் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்” என்றார்.

யுபி வாரியர்ஸ் இன்று (புதன்கிழமை) இரவு 7:30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருடன் மோதுகிறது. இந்த சுவாரஸ்யமான மகளிர் பிரிமியர் லீக் போட்டியை கலர்ஸ் தமிழ், ஜியோசினிமா, ஸ்போர்ட்ஸ்18 - 1, ஸ்போர்ட்ஸ்18 கேல், கலர்ஸ் கன்னட சினிமா ஆகியவற்றில் நேரலையில் காணலாம்.

First published:

Tags: WIPL