• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20I Ranking: 3-வது இடத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர்!

T20I Ranking: 3-வது இடத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர்!

ஹர்மன்ப்ரீத் கவுர். (BCCI)

ஹர்மன்ப்ரீத் கவுர். (BCCI)

ICC Women’s T20I Rankings Released | டி-20 பேட்டிங் தரவரிசையில் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் 9-வது இடத்தில் இருக்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சர்வதேச மகளிர் டி-20 பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 3-வது இடத்திற்கு முன்னேறினார்.

அண்மையில் மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடந்து முடிந்தது. இந்த தொடரில் இந்திய அணி, அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சர்வதேச மகளிர் டி-20 போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மகளிர் டி-20 உலகக் கோப்பை தொடரில் 183 ரன்கள் எடுத்திய இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், பேட்டிங் தரவரிசையில் 3 இடங்கள் முன்னேற்றி 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் மொத்தம் 632 புள்ளிகளைப் பெற்றுள்ளார். முதல் இரண்டு இடங்களில் நியூசிலாந்தின் சுஸி பேட்ஸ் (694) மற்றும் வெஸ்ட் இண்டீசின் ஸ்டாஃபானி டெய்லர் (656) ஆகியோர் உள்ளனர்.

Harmanpreet-Kaur
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் ஹர்மன்ப்ரீத் கவுர் (BCCI)


ஜெமீமா ரோட்ரிக்ஸ் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் கணிசமாக முன்னேற்றம் கண்டுள்ளனர். 9-வது இடத்தில் இருந்த ஜெமீமா 6-வது இடத்திற்கு முன்னேறி அவரின் சிறந்த தரவரிசையை பதிவு செய்தார். மந்தனா 7 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார். மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் 9-வது இடத்தில் இருக்கிறார்.

Mithali Raj, WWCT20
இந்தியாவின் மிதாலி ராஜ், அயர்லாந்து பந்துவீச்சை சிதறடிக்கும் புகைப்படம்
(Twitter/ICC)


பந்துவீச்சுக்கான தரவரிசையில் இந்தியாவின் பூனம் யாதவ் 662 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறார். ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்கு இந்திய வீராங்கனைகள் யாரும் இடம்பெறவில்லை.

Also See...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesan L
First published: