Home /News /sports /

1985-ம் ஆண்டின் ரவி சாஸ்திரி போல் பாண்ட்யா ஜொலிப்பார்- சுனில் கவாஸ்கர்

1985-ம் ஆண்டின் ரவி சாஸ்திரி போல் பாண்ட்யா ஜொலிப்பார்- சுனில் கவாஸ்கர்

சுனில் கவாஸ்கர் - ஹர்திக் பாண்டியா

சுனில் கவாஸ்கர் - ஹர்திக் பாண்டியா

1985ம் ஆண்டு மினி உலகக்கோப்பை என்று அழைக்கப்படும் பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் கோப்பையை சுனில் கவாஸ்கர் தலைமையில் இந்திய அணி வென்றது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaAustraliaAustralia
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் ஹர்திக் பாண்டியா, 1985ம் ஆண்டு பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் கோப்பையை வென்ற போது ரவிசாஸ்திரி தொடர் நாயகனாகத் திகழ்ந்தது போல் திகழ்வார் என்று அப்போதைய கேப்டன் சுனில் கவாஸ்கர் தன் எதிர்ப்பார்ப்பைக் கொட்டியுள்ளார்.

1985ம் ஆண்டு மினி உலகக்கோப்பை என்று அழைக்கப்படும் பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் கோப்பையை சுனில் கவாஸ்கர் தலைமையில் இந்திய அணி வென்றது. அந்தத் தொடரின் நாயகன் ரவி சாஸ்திரி, சிறப்பாக விளையாடி காரை பரிசாக வென்றார். அது போல் ஹர்திக் பாண்டியா இப்போது செயல்படுவார் என்று கவாஸ்கர் அதீத நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்க : ரிசர்வ் வீரரா முகமது ஷமி?- முன்னாள் வீரர்கள் சாடல்

இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறும்போது,  “1985-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஆல் ரவுண்டர் ரவி சாஸ்திரி இந்தியாவுக்காக பிரமாதமாக ஆடி சாதித்தது போல் ஹர்த்திக் பாண்ட்யாவால் முடியும் என்று நான் நம்புகிறேன்.  ரவி சாஸ்திரி பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு தொடர் நாயகனாக காரைப் பரிசாக வென்றார்.

அது போன்று செய்வதில் ஹர்த்திக் வல்லவர். ஹர்த்திக் பாண்டியா முதுகு காயத்திலிருந்து மீண்டு வந்து சில மாதங்கள் ஆகிறது. எனவே அவரை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு மூலம் மேட்ச் வின்னராக இருப்பார். அவரது பீல்டிங்கும் அபாரமாக இருக்கிறது. ரன் அவுட் செய்வதும் ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பும். 1985-ம் ஆண்டில் ரவி சாஸ்திரி போல் ஹர்த்திக் பாண்டியா செயல்பட்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்
Published by:Raj Kumar
First published:

Tags: Hardik Pandya, Indian cricket team, Ravi Shastri, T20 World Cup

அடுத்த செய்தி