அயர்லாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாணடியா செயல்படுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளர்.
ஐயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 2 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் ஜூன் 26 மற்றும் ஜூன் 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமை தாங்குவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
Hardik Pandya to lead the Indian team in the two-match T20I series against Ireland later this month: BCCI pic.twitter.com/4wHdnqqgML
ஐயர்லாந்து தொடர் முடிந்த உடன் இங்கிலாந்து புறப்படும் இந்திய அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. மேலும் கொரோனா தொற்று காரணமாக இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டி தள்ளிவைக்கப்பட்டிருந்தது. அந்த டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி விளையாட உள்ளது.
இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டி20 போட்டி ஜூன் 17-ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தால் தொடரை இழக்கும் என்பதால் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.