ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கேப்டனாகிறார் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா? வருங்கால இந்திய அணியை உருவாக்க பிசிசிஐ அதிரடி திட்டம்?

கேப்டனாகிறார் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா? வருங்கால இந்திய அணியை உருவாக்க பிசிசிஐ அதிரடி திட்டம்?

ரோகித சர்மா மற்றும் ஹார்திக் பாண்டிய

ரோகித சர்மா மற்றும் ஹார்திக் பாண்டிய

ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு இந்திய கிரிக்கெட் அணிக்கு ஹார்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்து வெளியேறியது. இதனால் இந்திய அணியில் சில சீனியர் வீரர்களை டி20 போட்டிகளில் இருந்து நீக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.டி20 உலக கோப்பை தொடர் தோல்விக்கு பிறகு இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்களை செய்தது பிசிசிஐ. சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவை அதிரடியாக நீக்கியுள்ளது. மேலும் ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்ட மூத்த வீரர்களை டி20 போட்டிகளில் இருந்து ஓரம் கட்டவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. மேலும் வங்கதேச சென்றுள்ள இந்திய அணி அங்கு இரண்டாவது முறையாக ஒருநாள் தொடரை இழந்தது. இதனால் இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இப்படி இந்திய அணியின் தொடர் தோல்வியால் இந்திய அணியில் மாற்றம் செய்யவும் பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறது. இதனால் டி20 போட்டிக்கு ஹார்திக் பாண்டிய அடுத்த கேப்டனாக நியமிக்க வாய்ப்பு அதிகம் இருந்தது. இதற்காக ஹார்திக் பாண்டிய தலைமையில் டி20 தொடரில் விளையாட நியூசிலாந்துக்கு சென்று விளையாடியது இந்திய அணி. இந்த நிலையில் ஒருநாள் மற்றும் டி20 உள்ளிட்ட ஒயிட் -பால் போட்டிகளுக்கு இந்திய அணிக்கு கேப்டனாக ஹார்திக் பாண்டியாவை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: சரசரவென கூடிய 50 லட்சம் ரசிகர்கள்.. அர்ஜெண்டினா பஸ்ஸுக்குள் குதித்த ரசிகர்.. ஹெலிகாப்டரில் தப்பிய மெஸ்ஸி..

 சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு குழு கலைப்பட்டுள்ள நிலையில் புதிய தேர்வு குழு தேர்தெடுக்கப்பட்ட பின்னர் இந்திய அணிக்கு ஹார்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்க வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மேலும் வருங்காலத்தில் இந்திய அணியை மேலும் தலைசிறந்த அணியாக உருவாக்கவும் பிசிசிஐ பல அதிரடி திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

பிசிசிஐ இளம் கேப்டனை நியமித்து இந்திய அணிக்கு வலுவான கட்டமைப்பை உருவாக்க விரும்புகிறது. மேலும், இந்த மாற்றத்திற்குப் பிறகு ரோஹித் சர்மா டெஸ்ட் கேப்டனாக மட்டுமே இருப்பார், மேலும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளை ஹர்திக் கவனிப்பார் என எதிர்பாக்கப்படுகிறது. இந்த மாற்றம் அடுத்தாண்டு இலங்கை தொடருக்கு முன் இந்திய அணிக்கு பாண்டிய கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 அயர்லாந்துக்கு எதிரான இரண்டு டி20 போட்டித் தொடரில் முதன்முறையாக ஹர்திக் இந்திய அணி தலைமையில் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் இந்தியாவின் துணைக் கேப்டனாகவும் இருந்தார், . நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியை பாண்டியா வழிநடத்தினார்இந்தியா 1-0 என தொடரை கைப்பற்றியது. 2022 டி20 உலகக் கோப்பையின் சில போட்டிகளிலும் ஹர்டிக் பாண்டியா முக்கிய பங்கு வகித்தார்.

கடந்த முறை ஐபிஎல் தொடரில் முதன் முறையாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தலைமை தாங்கிய ஹார்டிக் பாண்டிய சிறப்பாக செயல்பட்டு முதல் தொடரிலே சாம்பியன் பட்டம் வாங்கி கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.இதனால் இந்திய அணிக்கு அடுத்த கேப்டனாக செயல்படும் திறன் பாண்டியவிடம் உள்ளது என பலரும் கருத்து தெரிவித்தனர் குறிப்பிடதக்கது.

First published:

Tags: BCCI, Hardik Pandya, Indian cricket team