• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • இலங்கை தேசிய கீதத்தை பாடிய ஹர்திக் பாண்டியா.. வைரல் வீடியோ

இலங்கை தேசிய கீதத்தை பாடிய ஹர்திக் பாண்டியா.. வைரல் வீடியோ

ஹர்டிக் பாண்டியா

ஹர்டிக் பாண்டியா

இலங்கை தேசிய கீதத்தை பாடும் இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் வீடியோ தான் தற்போது, சமூக ஊடகங்களில் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 • Share this:
  இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 T20 போட்டிகளை விளையாடி வருகிறது. ஏற்கனவே, நடந்து முடிந்த 3 ஒருநாள் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய அணி. இந்த நிலையில் நேற்று(ஜூலை25) T20 தொடரின் முதல் போட்டி கொழும்புவில் ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கு முன்னதாக இரு அணிகளும் தங்களது நாட்டின் தேசிய கீதத்தை பாடி மரியாதை செலுத்தினர். அந்த வகையில் அதில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று இப்போது நெட்டிசன்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

  Also Read : செப்.19-ல் சிஎஸ்கே-மும்பை இந்தியன்ஸ் மோதல்- ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு

  இலங்கை தேசிய கீதத்தை பாடும் இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் வீடியோ தான் தற்போது, சமூக ஊடகங்களில் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. போட்டி ஆரம்பமாவதற்கு முன்னால், இலங்கை தேசிய கீதம் ஒலித்த போது இலங்கை அணி வீரர்கள் மரியாதை செலுத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. அப்போது இந்திய அணியின் வீரர் பாண்டியாக்கு க்ளோஸ் அப் வைத்த கேமராமேன், அவர் தேசிய கீதம் பாடுவதை நேரலையில் காண்பித்துள்ளார். அவ்வளவு தான், இந்த வீடியோவும், இது சார்ந்த ஸ்னாப்ஷாட்களும் இணையத்தில் மிக வைரலாக பரவியது.  பொதுவாக கிரிக்கெட்டில் நடக்கும் பல சம்பவங்களுக்காக கிரிக்கெட் வீரர்கள் இணையத்தில் கொண்டாடப்படும் சம்பவங்களும் உள்ளன. அதேசமயம் ட்ரோல் செய்யப்படும் சம்பவங்களும் நடந்துள்ளன. அந்த வகையில் ஹர்திக் பாண்டியாவின் செயல் இந்திய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவரை கண்டு பெருமைப்படுவதாக பல நெட்டிசன்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

  Also Read : தங்கம் வென்று கெத்து காட்டிய தீஸ்திரியா க்ராஸ்னிக்.. கொண்டாட்டத்தில் கொசவோ

  நேற்று நடைபெற்ற T20 தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேடிங்க செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் (India vs Sri Lanka) 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை இந்தியா அணி குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 50 ரன்களும், ஷிகர் தவான் 46 ரன்களையும் எடுத்தனர். இலங்கை சார்பில் சமீரா, ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகளும், சமிகா குணரத்னே ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

  இந்த நிலையில் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் அவிஷிங்கா ஃபெர்னாண்டோ மற்றும் மினோத் பானுகா அதிரடியான ஆட்டத்தை தொடங்கினர். ஆனால் வெகுவிரைவிலேயே ஆட்டமிழந்தனர். பேட்டிங் செய்த இலங்கை வீரர்களில் சாரித் அசலங்கா மட்டும் தான் அதிகபட்சமாக 44 ரன்களை எடுத்தார். இறுதியில், இலங்கை அணி 18.3 ஓவரில் 126 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டும், தீபக் சாஹர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்தியா 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற செட் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vijay R
  First published: