ஆஸி. தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா திடீர் விலகல்... ஜடேஜாவுக்கு ஜாக்பாட்!

#HardikPandya ruled out of #Australia’s tour of India | இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டிருந்தார். #INDvAUS

ஆஸி. தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா திடீர் விலகல்... ஜடேஜாவுக்கு ஜாக்பாட்!
ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. (Getty Images)
  • News18
  • Last Updated: February 21, 2019, 3:13 PM IST
  • Share this:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முழுத் தொடரில் இருந்தும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விலகியதாக பிசிசிஐ திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பெண்கள் குறித்து தவறாகப் பேசிய சர்ச்சையில் சிக்கிய ஹர்திக் பாண்டியா, அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்திய அணியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டார். இதனால், சில போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தவித்த அவர், ரஞ்சிப் போட்டியில் தனது திறமையை நிரூபித்தார்.

Hardik Pandya, ICC, பாண்டியா
ரஞ்சிப் போட்டியில் அசத்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. (Twitter/ICC)ஹர்திக் பாண்டியாவின் உடல்தகுதி திருப்தி தரும் வகையில் இருந்ததால், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் மீண்டும் சேர்க்கப்பட்டார். அந்தத் தொடரில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பார்முக்கு வந்துவிட்டதை உறுதி செய்தார். இதனை அடுத்து, இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டிருந்தார்.

Hardik Pandya, ஹர்திக் பாண்டியா
தடைக்குபின் நியூசிலாந்து தொடரில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா. (ICC)


இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முழுத் தொடரில் இருந்தும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விலகியதாக பிசிசிஐ திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவருக்கு முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் விலகியதாக பிசிசிஐ தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது.


ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாக அணியில் இடம் கிடைக்காமல் தவித்த ஜடேஜாவுக்கு ஜாக்பாட் அளித்துள்ளது.

Ravindra jadeja, ரவீந்திர ஜடேஜா
பேட்டை சுழற்றும் ரவீந்திர ஜடேஜா. (BCCI)


உலகக்கோப்பை நெருங்கும் நேரத்தில் ஹர்திக் பாண்டியாவின் காயம் இந்திய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

நான் புஜாரா இல்லை: புஜாரா 2.0! டி-20 போட்டியில் அதிரடி சதம்!

Also Watch...

First published: February 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்