சிகிச்சைக்காக லண்டனுக்குச் செல்லும் ஹர்திக் பாண்டியா! நீண்ட காலம் ஓய்வெடுக்கும் சூழல்

கடந்த ஆண்டு ஆசியக் கோப்பை போட்டியின் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் இன்னமும் அவருக்கு வலியை ஏற்படுத்திவருகிறது.

சிகிச்சைக்காக லண்டனுக்குச் செல்லும் ஹர்திக் பாண்டியா! நீண்ட காலம் ஓய்வெடுக்கும் சூழல்
ஹர்திக் பாண்டியா
  • News18
  • Last Updated: October 1, 2019, 9:45 PM IST
  • Share this:
ஹர்திக் பாண்டியாகவுக்கு முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தின் காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான டி-20 போட்டியில் அவர் இடம் பெற மாட்டார் என்று தெரியவந்துள்ளது.

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அணியின் முக்கிய வீரராக இருந்துவருகிறார். குறிப்பாக, டி-20 போட்டியில் அவருடைய அதிரடி பேட்டிங், அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவும் வகையில் இருந்துவருகிறது. இந்தநிலையில், கடந்த ஆண்டு ஆசியக் கோப்பை போட்டியின் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் இன்னமும் அவருக்கு வலியை ஏற்படுத்திவருகிறது.

அதனால், தென்னாப்பிரிக்கா தொடரிலிருந்து விலகியுள்ளார். தற்போது, முதுகு வலியின் நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக லண்டன் செல்லவுள்ளார். இதுகுறித்து பி.சி.சி.ஐ வட்டாரம், ‘புதன்கிழமையன்று, ஹர்திக் பாண்டியா லண்டனுக்குச் சென்று, ஆசியக் கோப்பை போட்டியின்போது அவருக்கு சிகிச்சையளித்த அதே மருத்துவரைச் சந்திக்கவுள்ளார்.


அதனால், அவர் வங்கதேசத்துக்கு எதிரான டி-20 போட்டியில் பங்கேற்கப் போவதில்லை. எத்தனை நாள்கள் ஓய்வில் இருப்பார் என்று தெரியவில்லை. அவர், இந்தியாவுக்கு திரும்பிய பிறகுதான் அதுகுறித்து முடிவு செய்யமுடியும். அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால் 2020 ஐ.பி.எல் வரை அவரால் அணியில் இடம் பெறுவது கடினம்’ என்று தெரிவித்துள்ளது.

Also see:

First published: October 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...