தனது வாழ்வில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர் இவர்தான் என்று முன்னாள் வீரரை குறிப்பிட்டு ஹர்திக் பாண்ட்யா நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான கடைசி 20 போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கே.எல். ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் முன்னணி பந்துவீச்சாளர்கள் இல்லாத சூழலில், இளம் வீரர்களை சிறப்பாக வழிநடத்தி கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்த தொடரை வெற்றிகரமாக முடித்துள்ளார். இத்தனைக்கும் ஹர்திக் பாண்டியா முன்னதாக எந்த ஒரு இந்திய அணிக்கும் கேப்டனாக பொறுப்பேற்று இருந்ததில்லை.
இவரது தலைமையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இடம் பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, தான் அறிமுகமான முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அடுத்து வரக்கூடிய இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே துணை கேப்டனாக இருந்த கே.எல். ராகுலிடமிருந்து துணை கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. கேப்டனாக தனது முதல் சர்வதேச கிரிக்கெட் தொடரை ஹர்திக் பாண்டியா வெற்றிகரமாக முடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- இந்த நேரத்தில் என்னுடைய குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ராவுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். எனது கிரிக்கெட் கெரியரில் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர் அவர்தான். எனது மனநிலையில் மாற்றத்தை அவர் ஏற்படுத்தினார். நானும் அவரும் வேறு நபராக இருந்தாலும், கிரிக்கெட்டை பற்றிய எங்களுடைய எண்ணங்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
அவருடன் நான் சிலகாலம் இருந்ததால் எனது தலைமை பொறுப்புக்கு மதிப்பு அதிகரித்துள்ளது. அதுதான் நான் எதை அடைய வேண்டுமோ, அதற்காக எனக்கு உதவி செய்தது. விளையாட்டைப் பற்றிய விழிப்புணர்வை நெஹ்ராவிடம்தான் கற்றுக் கொண்டேன்.
எந்த ஒரு ஜூனியர் கிரிக்கெட் அணியையும் நான் வழி நடத்தியது கிடையாது. 16 வயதுக்கு உட்பட்ட பரோடா அணிக்கு முன்பு ஒருமுறை கேப்டனாக செயல்பட்டேன்.
சிட்னி டெஸ்டை போராடி டிரா செய்த தென்னாப்பிரிக்க அணி… தொடரை வென்றது ஆஸ்திரேலியா
அதற்கு பின்னர் என்னுடைய ஆட்டத்தில் தான் கவனம் செலுத்த வேண்டும் என்று பலர் எனக்கு அறிவுரை கூறினார்கள். அதிலிருந்து நான் எந்த ஒரு அணிக்கும் கேப்டனாக பொறுப்பில் இருந்ததில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
‘இலங்கைக்கும் சூர்ய குமாருக்கும் இடையிலான போட்டியாக மாறிவிட்டது’ – கேப்டன் ஹர்திக் பாண்ட்யா புகழாரம்
ஆஸ்திரேலியாவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் பங்கேற்றது. அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோற்று வெளியேறியது.
இதைத்தொடர்ந்து சீனியர் வீரர்களுக்கு 20 ஓவர் போட்டியில் இருந்து தற்காலிக ஓய்வு அளிக்கப்பட்டு, அணியை வழிநடத்தும் பொறுப்பு ஹர்திக் பாண்டியாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தனது முதல் அசைன்மென்ட்டை சிறப்பாக முடித்து கிரிக்கெட் உலகின் கவனத்தை ஹர்திக் பாண்டியா ஈர்த்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hardik Pandya