Home /News /sports /

தோனி, கோலி, ரோஹித் செய்யாததை செய்த ஒரே கேப்டன் ஹர்திக் பாண்டியா

தோனி, கோலி, ரோஹித் செய்யாததை செய்த ஒரே கேப்டன் ஹர்திக் பாண்டியா

 பாண்டியா

பாண்டியா

உண்மையில் இந்தச் சாதனையை தோனியோ, கோலியோ, ரோஹித் சர்மாவோ நிகழ்த்த முடியாத ஒரு சாதனையை ஹர்திக் பாண்டியா நேற்று அயர்லாந்துக்கு எதிராக முதல் டி20 போட்டியில் நிகழ்த்தினார்.

    உண்மையில் இந்தச் சாதனையை தோனியோ, கோலியோ, ரோஹித் சர்மாவோ நிகழ்த்த முடியாத ஒரு சாதனையை ஹர்திக் பாண்டியா நேற்று அயர்லாந்துக்கு எதிராக முதல் டி20 போட்டியில் நிகழ்த்தினார்.

    அயர்லாந்து பயணம் மேற்கொண்டுள்ள ஹர்திக் பாண்டியா தலைமை இந்திய அணி தன் முதல் டி20 போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. மழை காரணமாக 12 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் அயர்லாந்து 108/4 என்று முடிய இந்திய அணி 9.2 ஓவர்களில் 111/3 என்று அபார வெற்றி பெற்றது.

    டாஸ் வென்ற இந்தியா முதலில் அயர்லாந்தை முதலில் பேட் செய்ய அழைத்தது. அந்த அணியின் ஹாரி டெக்டர் 33 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார். முதலில் 22/3 என்று குறுகிய அயர்லாந்து இவரது இன்னிங்ஸினால் தான் சவாலான 108 ரன்களை எட்ட முடிந்தது.

    பிட்ச் பசுந்தரையாக அமைய புவனேஷ்வர் குமாருக்கு பிரமாதமாக அமைந்தது. ஆண்டி பால்பர்னி என்ற அயர்லாந்து கேப்டனுக்கு ஒரு பந்தை வெளியே எடுத்து பிறகு உள்ளே கொண்டு வந்த போது கிளீன் பவுல்டு ஆகி டக் அவுட் ஆனார். 3ம் நிலையில் இறங்கிய காரெத் டெலானிக்கு ஒரு பெரிய இன்ஸ்விங்கரை வீசி பயமுறுத்தினார். புவனேஷ்வர் 2 ரன்களையே கொடுத்திருந்தார்.

    உம்ரன் மாலிக்கிற்குக் கொடுக்காமல் ஹர்திக் பாண்டியா புதிய பந்தில் வீசினாலும் அவர் பால் ஸ்டர்லிங் விக்கெட்டை வீழ்த்தினார். 2 ஓவர்களை வீசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 26 ரன்களைக் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

    இதன் மூலம் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட் வீழ்த்திய அதுவும் கேப்டனாக முதல் போட்டியிலேயே வென்று ஒரு விக்கெட்டையும் கைப்பற்றிய ஒரே இந்திய கேப்டன் ஆனார். டி20-யில் இதற்கு முன்பு கேப்டனாக இருந்த தோனி, கோலி, ரோஹித் சர்மா இந்தச் சாதனையை நிகழ்த்தவில்லை. ஏனெனில் அவர்கள் பவுலர்கள் இல்லை.

    ஆட்டம் முடிந்து ஹர்திக் பாண்டியா கூறும்போது, “தொடரை வெற்றியுடன் தொடங்குவது மிகவும் நல்லது, அதிர்ஷ்டவசமாக மழையால் முழுதும் போகாமல், எங்களுக்கு ஒரு ஆட்டம் கிடைத்தது. எங்கள் அணி வெற்றியுடன் தொடங்குவது முக்கியம். உம்ரன் மாலிக்குடன் நான் பேசினேன்.அவர் புதிய பந்தை விட பழைய பந்தில் மிகவும் நன்றாக விச முடியும் என்றார். அவர்கள் அற்புதமாக பேட்டிங் செய்தனர்." என்று ஹர்திக் போட்டிக்கு பிறகு கூறினார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Hardik Pandya, India, Ireland, T20

    அடுத்த செய்தி