• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • என்னது ரூ.5 கோடிக்கு வாட்சா.. திகைக்க வைத்த ஹர்திக் பாண்டியா...!

என்னது ரூ.5 கோடிக்கு வாட்சா.. திகைக்க வைத்த ஹர்திக் பாண்டியா...!

ஹர்திக் பாண்டியா (hardik pandya)

ஹர்திக் பாண்டியா (hardik pandya)

இன்ஸ்டாகிராமில் ஹர்திக் வாங்கியிருப்பதாக கூறும் படெக் பிலிப் நவுடிலஸ் பிளாட்டினம் 5711 வாட்சின் விலையானது 5 கோடி ரூபாய் என்பது நம்மை திகைக்க வைக்கிறது.

  • Share this:
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் தான் வாங்கியிருக்கும் புத்தம் புதிய வாட்சின் புகைப்படத்தை சமீபத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வாட்சின் விலை கேட்டு ரசிகர்கள் நெஞ்சடைத்து போயிருக்கின்றனர்.

இந்திய இளம் கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியா கிரிக்கெட்டை போலவே மிகவும் ரசித்து வாழ்க்கையை வாழக்கூடியவர். விலை உயர்ந்த அபார்ட்மெண்ட் வீடு, ஆடம்பர கார்கள், விலை மதிப்பான பொருட்கள் என ஹர்திக் பாண்டியா வாங்கும் அனைத்துமே விலை உயர்ந்ததாகவே இருக்கிறது.

Also Read:  ஆப்கனுக்கு உக்ரைன் மக்களை மீட்கச் சென்ற பயணிகள் விமானம் ஈரானுக்கு கடத்தல்!

தன்னுடைய சகோதரரும் இந்திய வீரருமான க்ருணால் பாண்டியாவுடன் சேர்ந்து மும்பையில் உள்ள ருஸ்ரம்ஜி பாராமவுண்ட் சொசைட்டி அடுக்குமாடி குடியிருப்பில் 8 படுக்கை அறைகளுடன் 3838 சதுர அடி கொண்ட 30 கோடி ரூபாய் விலை கொண்ட ஆடம்பர அபார்ட்மெண்டை வாங்கியிருந்தார். 4 + 4 என்ற அறைகளை சகோதரர்கள் பகிர்ந்து கொள்கின்றனர். இதே வளாகத்தில் தான் பாலிவுட் நட்சத்திரங்களான டைகர் ஷராஃப், திஷா பட்டானி ஆகியோரின் வீடுகளும் அமைந்திருக்கின்றன.

கார் பிரியரான ஹர்திக் பாண்டியா லம்போர்கினி ஹூராகேன், ஆடி ஏ6, மெர்சிடஸ் ஏ.எம்.ஜி கி 63, போன்ற ஆடம்பர கார்களை வீட்டில் நிறுத்தி வைத்திருக்கிறார்.

Also Read:  தாலிபான்களுக்கு சிம்மசொப்பனமாக திகழும் பஞ்ஷிர் நாயகன் சரண் அடைகிறாரா?

சாதாரண மணி பார்க்கும் கடிகாரத்தை கூட மலைக்க வைக்கும் விலையில் வாங்கி வாயடைக்க வைத்திருக்கிறார் ஹர்திக் பாண்டியா. இன்ஸ்டாகிராமில் ஹர்திக் வாங்கியிருப்பதாக கூறும் படெக் பிலிப் நவுடிலஸ் பிளாட்டினம் 5711 வாட்சின் விலையானது 5 கோடி ரூபாய் என்பது நம்மை திகைக்க வைக்கிறது.
அப்படி என்ன தான் இந்த வாட்சில் இருக்கிறதோ தெரியவில்லை. இந்த வாட்ச் பிளாட்டினத்தினால் ஆனது என்றும் இதில் விலைமதிப்பற்ற எமரால்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் முழுக்க முழுக்க அபூர்வமான பொருட்களால் இந்த வாட்ச் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் உலா வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதுகு வலியால் அவதிப்பட்ட ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நீண்ட காலமாக பவுலிங் செய்யாமல் இருந்து வந்தார். கடைசியாக இங்கிலாந்துடனான மேட்சில் தான் அவர் பந்து வீசியிருந்தார். எதிர்வரும் ஐபிஎல் 2021 சீசன் மற்றும் உலகக் கோப்பை டி20 தொடர் போன்றவற்றில் ஹர்திக் பாண்டியாவின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஐபிஎல்-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்குகிறார் அவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: