முகப்பு /செய்தி /விளையாட்டு / பிரமாண்டமாக நடைபெற்ற ஹர்திக் பாண்ட்யா – நடாஷா திருமணம்… கிரிக்கெட் பிரபலங்கள் பங்கேற்பு

பிரமாண்டமாக நடைபெற்ற ஹர்திக் பாண்ட்யா – நடாஷா திருமணம்… கிரிக்கெட் பிரபலங்கள் பங்கேற்பு

ஹர்திக் பாண்ட்யா - நடாஷா ஸ்டான்கோவிக்

ஹர்திக் பாண்ட்யா - நடாஷா ஸ்டான்கோவிக்

உதய்ப்பூர் அரண்மனையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் கிரிக்கெட் வீரர்கள், திரைத்துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

டி20-க்கான இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் செர்பியாவை சேர்ந்த நடிகை நடாஷா ஸ்டான்கோவிக்கின் திருமணம் உதய்பூர் அரண்மனையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று ஜோடியை வாழ்த்தினர். இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கே.எல். ராகுல் மற்றும் நடிகை ஆதியா ஷெட்டியின் திருமணம் சமீபத்தில் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்று இருவரையும் வாழ்த்தினர். இதேபோன்று ஆல்ரவுண்டர் அக்சர் படேல் திருமணமும் நடைபெற்றது.

இந்நிலையில் டி20க்கான இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தான் மீண்டும் தனது மனைவியை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இருவரும் முன்னதாக 2020-ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் முடித்தனர். ஜூலை மாதம் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்தது. இந்த திருமணம் நடைபெற்றபோது கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் திருமணம் எளிமையாக நடத்தப்பட்டது. இதனால் மீண்டும் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த ஹர்திக் பாண்ட்யா முடிவு செய்திருந்தார். இந்நிலையில் பாண்ட்யா – நடாஷாவின் திருமணம் உதய்ப்பூர் அரண்மனையில் இன்று நடைபெற்றது.

இந்த திருமணத்தில் இந்திய அணி வீரர்கள், திரை நட்சத்திரங்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையிலான இந்திய அணி, இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது

First published:

Tags: Cricket