ஹர்திக் பாண்டியா, ராகுலுக்கு 2 போட்டிகளில் தடை?

Pandya, KL Rahul to be banned for two matches? | ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம். #KoffeeWithKaran

news18
Updated: January 10, 2019, 4:07 PM IST
ஹர்திக் பாண்டியா, ராகுலுக்கு 2 போட்டிகளில் தடை?
ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல்.
news18
Updated: January 10, 2019, 4:07 PM IST
டிவி நிகழ்ச்சியில் சர்ச்சையாகப் பேசிய ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு தலா 2 போட்டிகளில் விளையாடத் தடைவிதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் தனியார் தொலைக்காட்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Koffee With Karan, Hardik Pandya, ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல்.
தொகுப்பாளர் கரண் ஜோஹர் உடன் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல். (Twitter)


பெண்களின் வாழ்க்கை முறை மற்றும் இனவெறியைத் தூண்டுதல் உள்ளிட்டவை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்தனர். இதனால், அவர்கள் இருவரும் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகினர். இதனை அடுத்து, தனது தவறுக்கு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டார்.

Hardik Pandya, ஹர்திக் பாண்டியா
‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியா. (Twitter)


“காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நான் கூறிய கருத்துக்கள் எந்த வகையிலாவது காயப்படுத்தி இருந்தால், அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எந்தவொரு வகையிலும் யாருடைய உணர்ச்சியையும் காயப்படுத்த நினைக்கவில்லை” என்று அவர் ட்விட்டரில் கூறியிருந்தார்.இந்த விவாகாரம் குறித்து 24 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்நிலையில், இருவருக்கும் 2 போட்டிகளில் விளையாடத் தடைவிதிக்க திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

bcci, vinod rai, பிசிசிஐ
பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய். (Getty Images)


“நிகழ்ச்சியில் இரு வீரர்கள் கூறிய கருத்துக்களை இன்றைய பத்திரிகைகளில் நான் பார்த்தேன். இவர்களை மன்னிக்க முடியாது. நான் நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை என்பதால் தண்டனையை பரிந்துரைக்க நிர்வாகக்குழு உறுப்பினர் டயானவிடம் கூறியுள்ளேன். இருவருக்கும் இரண்டு போட்டிகளில் விளையாட தடை கொடுக்கப்படும் என நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Koffee With Karan, Hardik Pandya, ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல்.
ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல்.


தடைவிதிக்கப்பட்டால், இருவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும்.

தோனி எங்களுக்கு வழிகாட்டும் ஒளி...! ரோகித் சர்மா நெகிழ்ச்சி.

Also Watch...

First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...