கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ நோட்டீஸ்!

#HardikPandya, #KLRahul issued show cause notice by #BCCI | தன்னுடைய கருத்துகள் யாருடைய மனதையும் காயப் படுத்தியிருந்தால் மன்னித்து விடுமாறு ஹர்திக் பாண்டியா ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

news18
Updated: January 9, 2019, 3:54 PM IST
கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ நோட்டீஸ்!
‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா. (Twitter/HardikPandya)
news18
Updated: January 9, 2019, 3:54 PM IST
டிவி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியை பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கி வருகிறார். அண்மையில் நடந்த நிகழ்ச்சியில், முதல் முறையாக கிரிக்கெட் அணி வீரர்கள் இருவர் பங்கேற்றனர்.

Koffee With Karan, Hardik Pandya, ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல்.
தொகுப்பாளர் கரண் ஜோஹர் உடன் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல். (Twitter)


இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். ‘ரேபிட் ஃபையர்’ என்ற கேள்வி - பதில் சுற்றில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகிய இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என கேள்வி கேட்கப்பட்டது.

Hardik Pandya, ஹர்திக் பாண்டியா
‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியா. (Twitter)


சிறிதும் தயங்காமல் இருவரும் விராட் கோலியின் பெயரைக் குறிப்பிட்டனர். அத்துடன், பெண்களின் வாழ்க்கை முறை மற்றும் இனவெறியைத் தூண்டுதல் உள்ளிட்டவை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்தனர். இதனால், அவர்கள் இருவரும் சமூக வலைதளங்களில்  கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகினர்.இதனை அடுத்து, தான் கூறிய கருத்துகள் யாருடைய மனதையும் காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுமாறு ஹர்திக் பாண்டியா ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இருப்பினும், இதுகுறித்து விளக்கம் கேட்டு இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

bcci, vinod rai, பிசிசிஐ
பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய். (Getty Images)


இதுகுறித்து பேசிய பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய், “தொடக்க வீரர் கே.எல்.ராகுல் மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவர்கள் 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும். கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சிகள் அல்லாத பிற நிகழ்ச்சிகளில் கிரிக்கெட் வீரர்களைப் பங்கேற்க அனுமதிப்பது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம்” என அவர் தெரிவித்தார்.

சிட்னி வந்து சேர்ந்தது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி!

Also See..

First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...